ஔவையின் ஆத்திசூடி ( சகர வருக்கம் )

                      ஔவையின் ஆத்திசூடி
                         (  சகர வருக்கம் )


ஆத்திசூடி  ஔவையாரால் எழுதப்பட்ட ஒரு நீதி நூலாகம்.
                              இதில் மொத்தம் 109 ஒற்றை வரி  பாடல்கள்  உள்ளன. எளிய நல்லொழுக்கக் கருத்துகள் கொண்ட இந்த ஆத்திசூடி பாடல்கள் பள்ளி குழந்தைகள் எளிதாக மனப்பாடம் செய்யும் விதத்தில் இயற்றப்பட்டுள்ளது.
                  உயிரெழுத்துகளைச் சொல்லிக்கொடுக்க பள்ளிகள் ஆத்திசூடி பாடல்களையே கற்பிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.
                  ஆத்திசூடி எளிமை கருதி கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளபடி வகைப்படுத்தப் பட்டுள்ளன.
                  உயிர் வருக்கம்
                  உயிர்மெய் வருக்கம்
                  ககர வருக்கம்
                  சகர வருக்கம்
                  தகர வருக்கம்
                  நகர வருக்கம்
                  பகர வருக்கம்
                  மகர வருக்கம் 
                  வகர வருக்கம்
                           
            சகர வருக்கப் பாடல்கள் அவற்றின் விளக்கத்தோடு  இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
                              
1.  சக்கர நெறி நில்.

       அரசு நெறிபடி     வாழ  கற்றுக் கொள்ள வேண்டும் .
       
        Translation :.    Honour  your  lands constitution.
        
     2. சான்றோர் இனத்து இரு .

          அறிவொழுக்கங்கள் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும்.
          
       Translation.  :.  Associate with noble.
       
      3.   சித்திரம் பேசேல்.

            பொய்யான வார்த்தைகளை முற்றிலும்  உண்மைபோல உருவகப்படுத்திப் பேசக் கூடாது.
            
    Translation.   :.   Stop being paradoxical.
    .    
      4.   சீர்மை மறவேல்.

        சீரான புகழ் பெறுவதற்கான நற்குணங்களை ஒருபோதும் கைவிட்டுவிடக் கூடாது.
        
          Translation. : Remember to be righteous .
          
      5.   சுளிக்கச் சொல்லேல்.

                 கேட்பவர் முகம் வெறுத்து கோபப்படும்படியான சொற்களை 

     ஒருபோதும் பேசக்கூடாது.
     
            Translation :.  Don't hurt others feelings.
            
       6.    சூது  விரும்பேல்.

            சூதாட்டம் ஆட விரும்புதல் கூடாது.
            
    Translation:.        Don't gamble.
           
     7.       செய்வன  திருந்தச் செய்.

              செய்யும் செயல்களைச்  சிறப்பாக செய்யும் பழக்கத்தை 
உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

           Translation : Action with perfection.
           
      8.  சேரிடம் அறிந்து சேர்.

               நாம் நட்பு கொள்ளும் நபர் நற்குணங்கள் நிறைந்தவரா என்பதை ஆராய்ந்து அதன் பின்னரே ஒருவரிடம் நட்பு கொள்ள வேண்டும்.
               
         Translation : Seek out good. Friends.
         
       9.     சையெனத்  திரியேல்.

              சீ  என்று பிறர் ஒதுக்கி வெறுக்கும்படியான செயல்களைச் செய்துகொண்டு அலையக் கூடாது.
              
          Translation :.  Avoid being insulted.
          
     10  .   சொற்சோர்வு படேல்.

             பிறரிடம் பேசும்போது ஒருபோதும் அடுத்தவரை மனவருத்தம் அடையச் செய்யும்படி பேசுதல் கூடாது.
             
             Translation :. Don't show fatigue in conversation.
             
  11.    சோம்பித்  திரியேல் .

               எந்தவித முயற்சியிலும் ஈடுபடாது வீணே சோம்பேறியாக 

இருத்தல் கூடாது.

       Translation :.  Don't be lazybones.
      

Comments

Popular Posts