ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் பற்றி படிப்பதற்கு முன்பாக பெயரெச்சம் என்றால் என்ன என்பதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும்.
படித்த பையன் என்ற சொல்லில் படித்த என்பது ஒரு முற்று பெறாத வினைச்சொல்.
பையன் என்பது ஒரு பெயர்ச்சொல்.
எனவே படித்த பையன் என்பது ஒரு பெயரெச்சமாகும்.
எடுத்துக்காட்டு :
ஒடிய + குதிரை = ஓடிய குதிரை
நடித்த + கலைஞர் = நடித்த கலைஞர்
படித்த + பெண் = படித்த பெண்
பெயரெச்ச சொற்களில் எச்ச வினைகளுக்கு பின் வரும் க , ச. , த , ப என்னும் வல்லின எழுத்துகள் மிகாது என்பதை அறிந்து கொள்க.
இப்போது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒரு வினைச்சொல் அதன் கடைசி எழுத்து இல்லாமல் வந்து அதனை அடுத்து வரும் பெயர்ச் சொல்லுக்கு விளக்கம் தருவதாக இருந்தால் அது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.
செல்லாக்காசு இதில் செல்லாத என்ற வினைச்சொல் கடைசி எழுத்து இல்லாமல் அதாவது ஈற்றெழுத்து கெட்டு செல்லா என வந்துள்ளது. காசு என்பது பெயர்ச்சொல்.
இப்போது செல்லாக் காசு என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயர்ச்சொல்லாகும்.
எடுத்துக்காட்டு :
வளையா + செங்கோல். = வளையாச் செங்கோல்
அழியா + புகழ் = அழியாப் புகழ்
ஓயா + தொல்லை = ஓயாத் தொல்லை
வணங்கா + தலை = வணங்காத் தலை
கேளா + செவி = கேளாச் செவி
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகும்என்பதைக்கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளிலிருந்து கண்டறிக.
இவை போன்ற சொற்களை அறிந்து பயிற்சி செய்க.
Comments
Post a Comment