மயங்கொலிகள்
மயங்கொலி
றகரம் மற்றும் ரகரம்
எழுத்துப் பிழையில்லாமல் எழுதுதல் சவாலான ஒன்று.
நம்மில் பலர் வல்லின றகரத்திற்குப் பதிலாக இடையின ரகரம்
போட்டு எழுதி விடுவோம்.
சிறப்பு ழகரம் எழுதுவதற்குப் பதிலாக லகரம் எழுதிவிடுவோம்.
மிகவும் அதிகமாக தவறு ஏற்படும் இடங்கள் ணகரம் னகரம் நகரம்
எழுதும்போதும் ஏற்படுவதுண்டு.
எழுதும்போதும் உச்சரிக்கும்போதும் இதுவா ...அதுவா... என மயக்கத்தை ஏற்படுத்தும் எழுத்துகளை மயங்கொலிகள் என்பர்.
இத்தகைய மயக்கம் ஏற்படக் காரணம் அவற்றின் பொருள் சரியாக
அறியப்படாமல் இருப்பதுதான்.
பொருள் மாறுபாடு தெரிந்து கொண்டால் ஒருபோதும் தவறாக எழுத மாட்டோம்.
பொருள் வேறுபாடு அறிவதற்கு ஏராளமான சொற்கள் அவற்றின் பொருளோடு தெரிந்து வைத்திருப்போமானால் தவறு குறைக்கப்பட வாய்ப்பு உண்டு.
முதலாவது றகரம் ரகரம் வரும் இடங்கள் எவை எவையென
அறிவோம்.
கருப்பு - கறுப்பு
பயிற்சி -பயிர்ச்சி
வரையரை - வரையறை
இதில் எது சரி எது தவறு என்ற குழப்பங்கள் எப்போதும் ஏற்படுவதுண்டு.
முதலாவது றகரம் மற்றும் ரகரம் வருமிடங்களை நன்றாக அறிந்து வைத்திருந்தாலே எந்தவொரு குழப்பமும் இல்லாமல் எழுத முடியும்.
றகரம் மற்றும் ரகரம் வரும் இடங்கள் :
1. றகர மெய் தன் உயிர்மெய்யோடு சேர்ந்து வரும்.
பதற்றம், குற்றம், விற்றான்
ரகரம் தன் மெய்யோடே சேர்ந்து வராது.
சேர்க்கும், சேகரம்
2. றகரம் னகர மெய்க்குப் பின் வரும்.
குன்றம் , தின்றான், கன்று
ரகரம் னகர மெய்க்குப் பின் வராது.
கொன்றை , சான்றோர்
3. றகரமும் ரகரமும் சொல்லின் முதல் எழுத்தாக வராது.
ரோமம் - உரோமம் என்று எழுதப்பட வேண்டும்.
ராமன்- இராமன் என்று எழுதப்பட வேண்டும்.
4. றகர மெய் சொல்லின் ஈற்றெழுத்தாக வராது.
பற என்பது முற்றுபெற்ற சொல்லாகாது.
5. றகரத்திற்கு னகரம் இன எழுத்தாகும்.
.
அதனால்தான் நெடுங்கணக்கில் றகரமும் னகரமும் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
6. றகர மெய்க்குப் பின் க, ச ,த , ப நான்கு உயிர்மெய் எழுத்துகள் வரும்.
7. ரகர மெய்க்குப்பின் க , ங , ச , ஞ , த , ந ,ப , ம , ய , வ என்னும் பத்து உயிர்மெய் எழுத்துகளும் வரும்.
8. ரகர மெய் தனி உயிர் குற்றெழுத்தின் பின் வராது.
அதாவது அ ,இ , உ, எ , ஒ ஆகியவை தனி உயிர்குற்றெழுத்து.
அதாவது உரம் என்று வரும்.
உர் ,அர் ,இர் ,எர், ஒர்....இப்படி மெய் எழுத்தோடு சேர்ந்து வராது.
ஊர்
ஆர்வம்
ஈர்க்கு ... இப்படி நெடில் எழுத்துகளோடு சேர்ந்து வரும்.
க , கி , கு , க, கெ , கொ... தனி உயிர்மெய் குற்றெழுத்துகள்.
9. றகர மெய்க்குப்பின் மெய்யெழுத்து வராது.
பயிற்ச்சி - என எழுதுவது தவறு.
அதற்க்கு, வரவேற்ப்பு. என எழுதுவதும் தவறு.
பயிற்சி, அதற்கு , வரவேற்பு என எழுதுவது சரி.
பொருள் அறிக
அரம் _ கருவி
அறம் _ தருமம்
அரவு _ பாம்பு
அறவு _ அறுத்தல், தொலைத்தல்
அரன் _ சிவன்
அறன் _ தர்மம் , அறக்கடவுள்
அக்கரை _ அந்தக் கரை
அக்கறை _ ஈடுபாடு
அப்புரம் _ அந்தப் பக்கம்
அப்புறம் _ பிறகு
அர்ப்பணம் _ உரித்தாக்குதல்
அற்பணம் _ காணிக்கை செலுத்துதல்
அரு _ உருவமற்ற
அறு _ அறுத்துவிடு
அருமை _ சிறப்பு
அறுமை _ நிலையின்மை , ஆறு
ஆர _ நிறைய. , அனுபவிக்க
ஆற _ சூடு குறைய
இரகு _ சூரியன்
இறகு _ சிறகு.
இரக்கம் _ கருணை
இறக்கம். _ சரிவு. மரணம்
இரை _ உணவு. ஒலி
இறை _ கடவுள், உயரம்
இரு _ இரண்டு, உட்கார் , பெரிய
இறு _ ஒடி , கெடு. , சொல்லு.
உரைப்பு _ தங்குதல் , தேய்த்தல்
உறைப்பு _ காரம் , கொடுமை
ஊரு _ அச்சம் , தொடை
ஊறு _ இடையூறு. , துன்பம். , குற்றம்
கரம் _ கை. , கழுதை. , விஷம்
கறம் _ கொடுமை , வன்செய்கை
கரவு _ பொய் , வஞ்சனை , மறைவு
கறவு _ கப்பம்
கரவை _ கம்மாளர் கருவி
கறவை _ பசு.
கரி _ அடுப்புக்கரி , யானை , பெண்கழுதை. , நிலக்கரி
கறி _ இறைச்சி. , மிளகு
கரத்தல் _ மறைத்தல்
கறத்தல் _ கவர்தல். , பால் கறத்தல்
கருத்து _ எண்ணம்
கறுத்து _ கருநிறங் கொண்டு
கரு _ சினை. , பிறவி , முட்டை. அணு.
கறு _ சினம். , கோபம். , அகங்காரம்
கரை _ எல்லை. , ஓரம்
கறை _ அழுக்கு. , குற்றம். , இரத்தம்
கர்ப்பம் _ கருவுறுதல்.
கற்பம் _ அற்பம். ,கஞ்சா. , ஆயுள்
கர்ப்பூரம் _ சூடம். , பொன்
கற்பூரம் _ பொன்னாங்கண்ணி
புரம் _ நகர்
புறம் _ வெளியில்
மாரி _ மழை
மாறி _ வேறுபட்டு
ஊர _ நகர
ஊற _ சுரக்க
அலரி _ ஒரு வகைப்பூ
அலறி _ கதறி
அருந்து _ குடி
அறுந்து _ அறுபட்டு
அருகு _ பக்கம்
அறுகு _ ஒருவகைப் புல்
சொரி _ பொழிதல்
சொறி _ அரிப்பு
வருத்தல் _ துன்புறுத்தல்
வறுத்தல் _ காய்கறிகளை வறுத்தல்
குரை _ நாய் குரைத்தல்
குறை _ சுருக்கல்
செரித்தல் _ சீரணமாதல்
செறித்தல் _ திணித்தல்
தரி _ அணிந்து கொள்
தறி _ வெட்டு
திரை _ அலை.
திறை _ கப்பம்
நிரை _ வரிசை
நிறை _ நிறைத்து வைத்தல்
பரி _ குதிரை.
பறி _ பிடுங்கு
பொரு _ போர் செய்தல்
பொறு _பொறுத்துக் கொள்
பொரி _ நெல் பொரி
பொறி _ இயந்திரம்
பெரு _ பெரிய
பெறு _ பெற்றுக்கொள்
துரவு _ கிணறு
துறவு _ துறந்து விடுதல்
குரவர் _ சமயப் பெரியவர்கள்
குறவர் _ பழங்குடி மக்கள்
கூரிய _ கூர்மையான.
கூறிய _ சொல்லியபடி.
கூரை _ வீட்டின் மேற்பகுதி
கூறை _ ஆடை
பரவை _ கடல்
பறவை _ பறக்கும். உயிரினம்
உரை _ பேச்சு
உறை _ மூடி, கவசம்
உரு _ வடிவம்
உறு _ மிகுதி
Comments
Post a Comment