ஔவையின் ஆத்திசூடி ( ககர வருக்கம் )
ஔவையின் ஆத்திசூடி
( ககர வருக்கம் )
ஔவையார் எழுதிய ஆத்திசூடி எளிய பாடல் வரிகளைக் கொண்ட நீதி நூலாகும்.
இதில் மொத்தம் 109 வரிகள் உள்ளன.
பள்ளிப் பருவத்திலேயே படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளும் வகையில் எளிமையான நல்லொழுக்கக் கருத்துகளைக் கொண்ட இப்பாடல்கள்
உயிர் வருக்கம்.
உயிர்மெய் வருக்கம்
ககர வருக்கம்
சகர வருக்கம்
தகர வருக்கம்
நகர வருக்கம்
பகர வருக்கம்
மகர வருக்கம்
வகர வருக்கம்
என்னும் பிரிவுகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆத்திசூடியில் ககர வருக்கத்தின்கீழ் வரும்
பன்னிரண்டு பாடல் வரிகளின் விளக்கத்தைக் இங்கே காணலாம்.
1 . " கடிவது மற. "
யாரையும் ஒருபோதும் கோபமாக கடிந்து பேசுதல் கூடாது.
Translation. :
Forget scolding others.
2 . " காப்பது விரதம் "
பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் அவற்றை பாதுகாத்து ஒழுகுவதே விரதமாகும்.
பிற உயிர்களை வருத்தாது
இருத்தலே விரதமாகக்
கருதப்படும்.
Translation :.
Keep Up your vows.
3. "கிழமைப்பட வாழ்."
முடிந்த மட்டும் பிறருக்கு நன்மை செய்து வாழ்க.
இயன்றவரை நன்மை செய்து
வாழ்தல் நன்று.
Translation. :.
Live your health and Wealth do best to others.
4. " கீழ்மை அகற்று."
கீழ்த்தரமான செயல்கள்
செய்வதை முற்றிலுமாக
ஒழித்து விடு.
ஒருபோதும் கீழ்த்தரமான
செயல்களைச் செய்யாதே.
Translation. :
Stay out of vulgar actions.
5. " குணமது கைவிடேல். "
நற்பண்புகளை ஒருபோதும் கைவிட்டு விடாதே.
நல்லொழுக்கம் கொண்டவனாக
இரு.
Translation. :
Don't give up good character.
6. " கூடிப் பிரியேல். "
நன்மக்களோடு கொண்டுள்ள
நட்பைக் கைவிடக் கூடாது.
சான்றோர்மாட்டுக் கொண்டுள்ள நட்பை ஒருபோதும் முறித்துக்
கொள்ளாதே.
Translation : Don't. Forsake friends.
7. "கெடுப்பது ஒழி. "
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.
கெடுசிந்தையற்றவனாக இரு.
Translation:
Do not involve in actions that creates trouble for others.
8. " கேள்வி முயல்."
கற்றறிந்த சான்றோரிடம் நூல் பொருளைக் கேட்டு அறிய முயற்சி செய்ய வேண்டும்.
தெரியாதவற்றைத் தெரிந்தவர்களிடமிருந்து
கேட்டு அறிய ஒருபோதும்
தயக்கம் காட்டாதே.
Translation :
Learn by questioning.
9. "கைவினை கரவேல்."
நமக்குத் தெரிந்த கைவினை பொருட்களைச் செய்யும்போது அதனை மற்றவர்களிடம் மறைக்க வேண்டும் என்று நினைக்காதே.
மறைத்து வைத்து எந்தச்
செயலையும் செய்யாதே.
செயல்கள் வெளிப்படையாக
இருக்கட்டும்.
Translation :
Do not hide knowledge
about handicrafts.
10. " கொள்ளை விரும்பேல்."
பிறர் பொருளைக் கொள்ளையடிக்க விரும்பாதே.
நமக்கு உரியவை அல்லாத
பொருட்களைக்
கவர்ந்து ,
நமதாக்கிக் கொள்ள வேண்டும்
என்ற எண்ணம் கூடாது.
Translation : Don't swindle.
11. " கோதாட்டு ஒழி ."
சூதாட்டம் போன்ற எந்தத்
தவறான விளையாட்டுகளையும் விளையாடக் கூடாது.
தவறான விளையாட்டுகளிலிருந்து
விலகி இரு.
Translation :
Ban all illegal games.
12. " கௌவை அகற்று. "
வாழ்வில் ஏற்படும் துன்பங்களை நீக்கி இன்பமாக வாழ வேண்டும்.
துன்பத்தில் உழன்று விடாமல்
இன்பமாக வாழ்க.
Translation : Don't vilify.
Comments
Post a Comment