ஔவையின் ஆத்திசூடி
ஔவையின் ஆத்திசூடி
( பகர வருக்கம் )
1 "பழிப்பன பகரேல்."
பொருள் : பிறர் மனம் புண்படும் படியான பழிச்சொற்களைப் பேசாதே.
Do not use bulgur language.
2".பாம்பொடு பழகேல்."
பொருள் : பாம்பிடமிருந்து எப்போதும் விலகியே இரு.
Keep away from snakes.
3. "பிழைபடச் சொல்லேல். "
பொருள் : தவறில்லாமல் தெளிவாகப் பேசு.
Speak clear with no mistakes.
4." பீடு பெற நில். "
பொருள் : பிறர் பெருமையாகச் சொல்லும்படியான செயல்களைச் செய்து பெருமையுடன் நில்.
Others should honour your actions.
5." புகழ்ந்தாரைப் போற்றி வாழ்."
பொருள் : உன்னைப் பாராட்டுபவரைச் சார்ந்து வாழ்.
Protect those who appreciate you.
6. "பூமி திருத்தி உண். "
பொருள் : உழவுத் தொழில் செய்து உணவை பெறுவதற்கான வழிமுறைகளைச் செய்.
Cultivate the land and feed.
7. "பெரியாரைத் துணைக் கொள்."
பொருள் : சான்றோர்களோடு இணக்கமாக இருக்கப் பழகிக் கொள்.
Seek help from old great and wise people.
8." பேதைமை அகற்று."
பொருள் : அறியாமையை அகற்று.
Eliminate ignorance.
9." பையலோடு இணங்கேல்."
பொருள் : அறிவில்லாதவரோடு இணக்கம் வைத்துக் கொள்ளாதே.
Do not get along with fools.
10. "பொருள்தனைப் போற்றி வாழ்."
பொருள் : கையில் பொருள் வரும்போதே அதைப் பாதுகாத்து வைக்கக் கற்றுக்கொள்.
Save wealth without wasting unnecessarily.
11. "போர்த் தொழில் புரியேல்."
பொருள் : தேவையில்லாமல் துன்பம் தரும் காரியங்களில் ஈடுபடாதே.
Avoid getting into unnecessary trouble scenarios.
Comments
Post a Comment