வறியார்க் கொன்று ஈவதே.....

     வறியார்க் கொன்று ஈவதே.....

"வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
 குறியெதிர்ப்பை நீர துடைத்து "

விளக்கம் :

  பொருள் ஏதும் இல்லாமல் துன்பப்படும் ஒருவருக்கு கொடுத்தல் மட்டுமே ஈதல் என்று சொல்லப்படும். மற்றபடி கொடுப்பதெல்லாம் 
  திரும்பப் பெற வேண்டும் என்ற நோக்கோடு கொடுப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

 English couplet :

    " Call that a gift to needy men thou dost dispense
     All else is void of good seeking for recompense "

Explanation :

   To give to the destitute is true charity. All other gifts have the nature of   ( what is done for ) a measured return.

Transliteration :

    vaRiyaarkkondru devadhai eekaimaR Ellaam
    KuRiyedhirppai neera thudaiththu


      தன்னால் வாங்கிய பொருளை திருப்பித் தர முடியாத அளவுக்கு பொருள் ஏதும் இல்லாத வறியவர்க்கு் கொடுப்பது மட்டுமே ஈகை எனப்படும். 
     மற்றபடி கொடுப்பது எல்லாம் கொடுக்கல் வாங்கல் தான்.  
     கைமாற்றாக ஒரு நூறு ...இருநூறு...என்று பணம் கொடுப்போமே... அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
     இன்று இல்லை என்றால் நாளை அந்த பணம் திரும்பி கிடைக்கும்.
     
     இன்று நாம் கொடுத்தால் நாளை அவர்கள் நமக்கும் உதவி செய்வார்கள்.  
     இப்படி ஏதோ ஒரு பிரதிபலனை எதிர்பார்த்து வழங்கப்படும் ஒரு செயலன்றி வேறெதுவும் இருக்க முடியாது.
     அப்படியானால் ஈதல் என்றாலே திரும்ப தர இயலாத ஒருவருக்கு கொடுத்தலாகும்.
      அது மட்டுமே ஈகை எனப்படும் என்கிறார் வள்ளுவர்.
     இப்போது யாருக்கு ஈதல் வேண்டும் என்பது புரிந்திருக்குமே!
       ஈந்து வாழ்வோம்.
       இசைபட வாழ்வோம்
       பிறரை மகிழ வைத்து வாழ்வோம்.
       அதுதாங்க வாழ்வு !

Comments

Popular Posts