எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...
" எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"
குறள். : 392
எண்ணென்ப _ கணிதம் என்று சொல்லப்படுவது
ஏனை _ மற்றும்
எழுத்தென்ப _ எழுத்து எனப்படுவது
இவ்வி்ரண்டும் _ இவை இரண்டும்
கண்ணென்ப _ கண் விழி என்று சொல்லப்படுகிறது
வாழும் உயிர்க்கு _ சிறப்பாக வாழும் உயிர்களுக்கு.
எண் என்று சொல்லப்படுகிற கணிதமும் எழுத்து எனப்படும் மொழி அறிவும் ஆகிய இவ்விரண்டும் வாழும் சிறப்புடைய உயிர்களுக்கு
கண் எனப்படும்.
விளக்கம் :
எண் என்று சொல்லப்படுகின்ற கணித அறிவு
அனைத்துத் துறைகளிலும் முதன்மையாகக்
கருதப்படுகிறது. அந்தக் கணித அறிவு இல்லாமல்
ஒன்றுமே செய்ய முடியாது.
வாழும் உயிர்க்கு கணித அறிவு
மிகவும் இன்றியமையாத ஒன்று.
எண்ணுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ
அவ்வளவு முக்கியத்துவம் எழுத்துக்கும் உண்டு.
எழுத்து என்றால் வெறும் எழுத்து என்பது
மட்டும் பொருளாகாது.
எழுத்தாலாகிய சொல், சொற்களால்
ஆகிய நூல் என்று எல்லாமே எழுத்து
என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கும்.
அப்படியானால் வாழும் உயிருக்கு நூல்
அறிவும் கண் போன்றதுதான்.
அறிவியல் ,புவியியல் ,வரலாறு, சாஸ்திரங்கள்,
இதிகாசங்கள் என்று எல்லா நூல்
அறிவும் எழுத்துக்குள் அடங்கிவிடும்.
ஆதலால் இவ்வுலகில் வாழும் உயிர்க்கு
எண்ணறிவு எவ்வளவு முக்கியத்துவம்
வாய்ந்ததோ அவ்வளவு முக்கியத்துவம்
வாய்ந்தது எழுத்து அறிவு எனப்படும்
நூல் அறிவுமாகும்.
கண்களின் மூலமாக உலகின்
நல்லது _ கெட்டது ,அழகு _அழகின்மை
என்று பருப்பொருள் யாவற்றையும்
காணமுடிகிறது.
புத்தகங்களின் மூலமாகத்தான்
மனம் சார்ந்த அறிவு பெறமுடியும்.
உலகைப் பற்றிய உண்மைகளைத்
தெரிந்து கொள்ள முடியும்.
வாழ்க்கைக்கும் வாழ்வியலுக்கும்
கண்களாக இருந்து வழிநடத்துபவை
எண்ணும் எழுத்துமாகிய
இவ்விரு அறிவுக் கண்கள் மட்டுமே
என்பது வள்ளுவர் கருத்து.
ஔவையாரும்,
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் "
என்று கூறியுள்ளார்.
English couplet. :
The twain that lore of numbers and of letters give
Are eyes, the wise declare , to all on earth that live "
Explanation :
Letters and numbers are the two eyes of man.
Transliteration :
"eNNenpa Enai ezhuththenpa ivviraNdum
KaNNenpa vaazhum uyirukku"
தமிழ் எண்களைத் தெரிந்து கொள்ளுங்கள்:
தமிழ் எண்ணெழுத்துக்கள் பற்றிய பயனுள்ள பதிவீடு.
ReplyDeleteUseful meaning.
ReplyDelete