ஆத்திசூடி _ நகர வருக்கம்

                  ஆத்திசூடி _  நகர வருக்கம்

   1 நன்மை கடைபிடி.
  
      நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
     
      Adhere to the beneficial.
         
      2  நாடொப் பனசெய்.
     
    நாட்டு மக்கள் ஏற்கத்தக்க நல்ல காரியங்களைச் செய்.
       
        Do nationally agreeable.
       
        3.நிலையிற் பிரியேல்.
       
   நீ இருக்கும் நிலையிலிருந்து ஒருபோதும் தாழ்ந்து விடாதே.
        
         Don't depart from good standing.
        
        4 நீர் விளையாடேல்.
       
    வெள்ளத்தில் விளையாட்டு செய்தல் கூடாது.
        
         Don't jump into a watery grave.
        
         5. நுண்மை நுகரேல்.
       
   நோய்தரும் நொறுக்குத்தீனி உணவுகளை
     அதிகமாக உண்ணக்கூடாது.
       
       Don't over snack.
       
        6. நூல் பல கல்
      
   அறிவை வளர்க்கும் நல்ல நூல்களை
  படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
       
        Read lot of books.
       
       
        7.  நெற்பயிர் விளை.
       
      உணவுக்கு ஆதாரமாக உள்ள நெற்பயிரிடுவதை
      வாழ்க்கைத் தொழிலாக செய்க.
         
          Do agriculture.
         
          8. நேர்பட வொழுகு.
         
    ஒழுக்க நெறி தவறாமல் நேர்மையுடன் நடக்க வேண்டும்.
           
            Exhibit good manners always
           
          . 9.    நைவினை நணுகேல்
         
       பிறர் வருந்தத் தக்க தீய காரியங்களை
        ஒருபோதும் செய்தல் கூடாது.
               
            Don't involve in destruction.
           
           10.  நொய்ய உரையேல்.
         
      பயன் இல்லாத  தரம்தாழ்ந்த சொற்களைப் பேசாதே.
                
                 Don't dabble in sleaze.
                
         11. நோய்க்கிடங் கொடேல்.
        
    நோய்க்கு வழி வகுக்கும் உணவுப் பழக்கவழக்கங்களைக்
     கைவிட்டு உடல்நலம் பேண்.
          
           Avoid unhealthy lifestyle.

Comments

Popular Posts