தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை

   

 தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை

தமிழ் அரிச்சுவடி படிக்காமல் தமிழ்
  எழுத்துகளைத் தெரிந்து கொள்ள முடியாது.
 இது  தமிழ் அகர வரிசை, தமிழ் நெடுங்கணக்கு
  என்ற பெயர்களாலும்  அழைக்கப்படும்.
  தமிழ் எழுத்துகள் எத்தனை என்ற
  கேள்விக்கு  247 என்று நம்மில் பலருக்குத்
  தெரியும்.
காரணம் தமிழராக இருந்து கொண்டு
தமிழ் எழுத்துகள் எத்தனை  என்பதுகூட
தெரியவில்லையே என்று யாராவது
சொல்லிவிட்டால்...
அப்படி ஒரு அச்சம் எப்போதும் மனதில்
இருக்கும்.
எப்படி என்று கேட்டால்  முழுவதையும்
சரியாகச் சொல்லத் தெரியாது.
கூட்டிக் கழித்து சொல்லிப் பார்ப்போம்.
அங்கங்கே இடிக்கும்.
கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்ப்போம்.

                  உயிர் எழுத்துகள்           =    12
                  மெய்யெழுத்துகள்        =     18
                  உயிர்மெய் எழுத்துகள் =   216
                  ஆய்த எழுத்து.            =           1

                  மொத்த  எழுத்துகள்     =  247

      எழுத்து எனப்படுவ
      அகரம் முதல் னகரம் இறுவாய்
       முப்பஃது என்ப "
                                       என்பது தொல்காப்பியம்.

          
                       உயிர்   எழுத்துகள்           


       குறில் எழுத்துகள் : 
      
   அ  இ  உ  எ  ஒ   ஆகிய ஐந்து

எழுத்துகளும் குறில் எழுத்துகள் எனப்படும்.

 இவை குறைந்த ஒலியளவு கொண்டவை.

அதாவது ஒரு மாத்திரை அளவு கொண்டவை.

                  
  நெடில் எழுத்துகள். :
        
 ஆ  , இ,   ஈ  , ஊ  , ஏ ,  ஐ   ,ஓ   ,ஔ  ஆகிய
 ஏழு எழுத்துகளும்  நெடில் எழுத்துகள் எனப்படும்.

 இவை   அதிக ஒலியளவு கொண்டவை .
அதாவது  இரண்டு   மாத்திரை அளவு கொண்டவை.
                       
                    
                       மெய்யெழுத்துகள்  :  18

  

இவை  வல்லினம் ,மெல்லினம் , இடையினம் 
என அவற்றின் ஒலிப்பு அளவை 

வைத்து பகுக்கப்பட்டுள்ளன.

மெய் எழுத்துகள் அரை மாத்திரை  

ஒலியளவு கொண்டவை.

வல்லினம்.  :

  க்  ,ச்  ,ட்   ,த் , ப்  ,ற் ஆகிய ஆறு மெய்யெழுத்துகளும்
  வல்லினம் எனப்படும்.

மெல்லினம்  :

ங் , ஞ்   ,ண்  ,  ந் , ம்   , ன் ஆகிய ஆறு
மெய்யெழுத்துகளும் மெல்லினம் எனப்படும்.

இடையினம்   :  

  ய்  , ர்  ,ல்   ,வ்   ,ழ்    ,ள்  ஆகிய ஆறு எழுத்துகளும்
  இடையினம் எனப்படும்.

         
                
                              உயிர்மெய் எழுத்துகள்

புள்ளிவிட்டு அவ்வொடு முன்உரு ஆகியும்
  ஏனை உயிரொடு உருவு திரிந்தும்
  உயிர் அளபாய் அதன்வடிவு ஒழிந்து இருவயின்
  பெயரொடும் ஒற்று முன்னாய் வரும் உயிர்மெய் "
                             
                                                               நன்னூல்   _89
     

மெய்யெழுத்தானது அகரத்தோடு    சேரும்போது
புள்ளி இல்லாமலும் ஏனைய
உயிர்களோடு சேரும்போது
அதன் வடிவம் மாறியும்
எந்த உயிரோடு சேருகிறதோ
அந்த உயிரெழுத்தின் மாத்திரை அளபு
கொண்டதாய்
  உயிர் எழுத்துகள் ஒவ்வொன்றுடனும் சேர்ந்து உருவாகும்
எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படும்.
இதில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்துப் பின்னும் ஒலிக்கப்படும்.
பதினெட்டு மெய் எழுத்துகளும் பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடு சேர்ந்து இருநூற்றுப் பதினாறு (216  )
உயிர்மெய்  எழுத்துகள் தோன்றும்.

  எடுத்துக்காட்டு. :

                          க்  + அ    = க
                          க்  +  ஆ    = கா
                          க்  +  இ    =  கி
                          க்  +  ஈ      =  கீ
                          க்   +  உ    =  கு
                          க்  +  ஊ    = கூ
                          க்  +   எ     = கெ
                          க் +    ஏ     = கே
                          க்  +   ஐ     =  கை
                          க்  +   ஒ     =  கொ
                          க்  +   ஓ     =  கோ 
                          க்  +   ஔ  =  கௌ
                         

    இவ்வாறு      18   ×   12  =  216  உயிர்மெய் எழுத்துகள்
   தோன்றுகின்றன.

  ஆய்த எழுத்து  =   1        (     ஃ   )

  ஆய்த எழுத்து தனிநிலை என்றும் அழைக்கப்படும்.

   ஆய்த எழுத்தின் ஒலியளவு   அரை மாத்திரை ஆகும்.

       " இயல்பு எழும் மாந்தர் இமை  நொடி மாத்திரை  "
            
        என்கிறது நன்னூல்.
            

     தமிழ் எழுத்துகள் மொத்த எண்ணிக்கை 247.
             

Comments

Post a Comment

Popular Posts