முயற்சி திருவினை ஆக்கும்...

                   முயற்சி திருவினை ஆக்கும்


    "  முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
      இன்மை புகுத்தி விடும்  "
                                      

                                            குறள்.   :   616

      முயற்சி  _  முயலுதல்
      திருவினை _  செல்வம்
      ஆக்கும் _ உண்டாக்கும்
      இன்மை  _  இல்லாதிருத்தல்
      புகுத்திவிடும் _ சேர்த்துவிடும்

    விளக்கம்  :  முயற்சி செய்து கொண்டிருப்பவனிடத்தில் செல்வம்பெருகிக்கொண்டே இருக்கும்.

    எந்தவித முயற்சியும் செய்யாமல் இருப்பவன் வீட்டில்           வறுமை குடி கொண்டுவிடும்.

  

  English couplet : 616

      "Effort brings fortune's sure increase
       Its absence brings to nothingness"

Explanation:

       Labour will produce wealth ; idleness will bring poverty.

Transliteration:

     " muyaRchi thiruvilaiyadal kaakkum muyaRtrinmai
      unmai pulutthi vidum "

  செயல்பட வேண்டும் என்ற  ஆர்வம் இருந்தால் போதும்.
  தொடர்ந்து செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
  அந்த    உழைப்பு செல்வத்தைப் பெருகச் செய்யும்.
  வெற்றிகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.
  பாடுபட்டு உழைப்பவனுக்கு அந்த உழைப்புக்கு ஏற்ற
ஊதியம் கண்டிப்பாக வந்து சேரும்.
எந்தவித முயற்சியும் செய்யாமல் விதிவிட்டவழி என்று
விதியின்மேல் பழியைப் போட்டுவிட்டு சோம்பலாக
இருப்பவன் வீட்டில் செல்வம் இருக்காது. வறுமைதான் நிறைந்திருக்கும்.
  முயற்சி செய்பவன் வீட்டில் திரு என்று சொல்லப்படுகிற
செல்வம்  நிலைத்திருப்பது உறுதி.
முயற்சி செய்யாதவன் வீட்டில் திரு இருப்பதற்கு
  வாய்ப்பே இல்லை.
  வறுமையைத் தவிர வேறு எதுவும் இருக்காது.
    
  முயற்சி செல்வத்தை உண்டாக்கும்.
  முயற்சி செய்யாதிருந்தால் வறுமைதான் வந்து சேரும்
  என்பது இக்குறளின் கருத்தாகும்.
 
  

 
  
 
   

Comments

Popular Posts