அகர முதல எழுத்தெல்லாம்.....

          அகர முதல எழுத்தெல்லாம்......

   "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே  உலகு  "
                          குறள்.  :  1

அகர _ 'அ ' எனத் தொடங்கும் அகர வரிசை
முதல _ முதலாக உடையன 
எழுத்து _ எழுதப்படுவது,
எல்லாம் _ அனைத்தும் 
ஆதி   _ தொடக்கம் , மூலம் , அடிப்படை 
பகவன் _ இறைவன், படைத்தவன் ,முதல்வன்,
                 கடவுள், தலைவன்
உலகு _ உலகம்


எழுத்துகள் எல்லாம் அகரத்தை தமக்கு
 முதலாகக்கொண்டுள்ளன. 
 அதுபோல உலகம் கடவுளை முதலாகக்
 கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது.
 
விளக்கம்  :

எழுத்துகள் எல்லாம் அகரமாகிய எழுத்தை
 தமக்கு முதலாகக் கொண்டுள்ளன.
 அகரம்தான் நெடுங்கணக்கு எழுத்துகளில்
 முதன்மையானது.
 
 அகரம் எல்லா எழுத்துகளிலும் 
 கலந்து, இயக்கி, தானும் தனியாக
  இயங்கும்  தன்மை பெற்றது.
 அதுபோல இறைவனும் எல்லா 
 உயிர்களிலும் இரண்டற கலந்து
 இயக்கி, தனித்தன்மை கொண்டிருப்பவன்.
 
 உலக மொழிகள் அனைத்தும் அகரத்தில்தான்
தொடங்குகின்றன.ஆனால் 
அனைத்து மொழிகளின்
இறுதி எழுத்தும் மாறுபடுகின்றன.

திருவள்ளுவர் ,எல்லா மொழிகளுக்கும் 
பொருந்துமாறு அமைந்த அகரத்தை 
முதல் எழுத்தாகக் கொண்டு தனது 
ஒப்பற்ற படைப்பாம்  திருக்குறளைத் 
தொடங்கியிருப்பது போற்றுதற்குரியது.

பகவன் என்றால் இறைவன் 
என்று பொருள்.
அது எந்தக் கடவுளாகவும் இருக்கலாம்.
அதனால்தான் எந்தக் கடவுள் 
பெயரையும் வள்ளுவர் குறிப்பிட்டுச்
சொல்லவில்லை.

ஆதி பகவன் என்று சொன்னதன்மூலம் 
இறைவனே ஆதி .
அவருக்கு முன்னர் எவரும் இலர் 
 என்பதை உறுதிப்படுத்துகிறார் வள்ளுவர்.
அதனால் திருவள்ளுவர் கடவுள்
நம்பிக்கை உடையவர் என்பது
 இதன்மூலம் உறுதியாகிறது.

  எந்த ஒரு மூலமும் இல்லாமல்
 இந்த உலகம் தோன்றி இருக்க முடியாது.
 உலகம் தோன்ற மூலமாக நின்று
 இன்றுவரை இயக்கிக் கொண்டிருப்பவன்
 இறைவன்.
 
 இறைவன் உலகிற்கும் உலக 
 படைப்புகளுக்கும்
 ஆதியானவன்.அந்த முதன்மையை 
 மட்டுமே சொல்லி எந்தக் கடவுளின்
 பெயரையும் சொல்லாது தன் குறளைத்
  தொடங்கியதின்மூலம் வள்ளுவர் ஒரு
  மதநல்லிணக்கவாதியாகத்தான்
  இருக்கமுடியும் என நம்ப முடிகிறது.
  
  அதனால்தான் திருக்குறளை உலகப் 
  பொதுமறை என்று எல்லா மதத்தினரும்
  ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இலக்கணம் :

இந்தக் குறள்  எடுத்துக்காட்டு உவமை அணிக்கு 
எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.
எடுத்துக்காட்டு உவமையணியாவது 
உவமானத்தையும்
உவமேயத்தையும் தனித்தனி வாக்கியங்களாக
நிறுத்தி, இது பொருள் இது உவமை என 
தோன்ற இடையில்  அதுபோல 
என்னும் உவம உருபு இல்லாமல் கூறுவது.

இந்த இரண்டு வாக்கியங்களையும்
இணைக்க போல என்ற உவம உருபு 
இல்லை .ஆதலால் இது எடுத்துக்காட்டு
உவமையணி எனப்படுகிறது.


English couplet. : 

A, as its first of letters , every speech maintains;
The Primal Deity is first through all the world's domains.

Explanation : 

As the letter A is the first of all letters, so the 
Eternal God is first in the world .

Transliteration. :

"agara mudhala ezhuththellaam aadhi 
pakavan mudhatre ulaku "


Comments

Popular Posts