நீர்இன்று அமையாது

            நீர்இன்று அமையாது உலகெனின்...


  "நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு "

                                         குறள்  :  20

நீர்இன்று _ நீர் இல்லாமல்
அமையாது _ நிலைபெறாது
உலகெனின் _ உலகு என்றால்
யார்யார்க்கும் _  எவ்வகைப்பட்டவர்க்கும்
வான்  _   மழை
இன்று _  இல்லாமல்
அமையாது _  அமையாது
ஒழுக்கு  _  ஒழுக்கம்

நீர் இல்லாமல் உலகில் எவ்வுயிரும் வாழ இயலாது.
அதுபோல மழை இல்லை எனில் எந்த ஒழுக்கவாழ்வும்
நடைபெறாது.

விளக்கம் :

எப்படிப்பட்டவராயினும் நீர் இல்லாமல் உலக வாழ்வை
நடத்திட முடியாது. அதுபோல எத்திறத்தாராயினும்
மழை இல்லாமல் போகுமானால் வாழ்க்கைக்குச்
சிறப்பு தரும் தவ ஒழுக்கங்கள் நடத்திட இயலாது.

உயிர்கள் நிலைபெற்றிருப்பதற்கு மட்டுமல்ல
ஒழுக்கத்திற்கும் மழைதான் காரணம்.நீரில்லாமல்
உலகியல் நடவாது என்பது உண்மையானால்
மழை இல்லாமல் எவர்க்கும் ஒழுக்க வாழ்வும்
கெடும்.

யார்யார்க்கும் என்று கூறியுள்ளதால் உயர்ந்தவர்,
தாழ்ந்தவர், கற்றவர், கல்லாதவர், செல்வந்தர் , ஏழை
என்ற வேறுபாடின்றி, யாருமே தானம், தவம்
போன்றவை நடத்திட முடியாது.
மழை இல்லாமல் போனால் வறுமையும் பசியும்
மிகும்.மழை இல்லாவிடில் சமூக ஒழுக்கம்
குறைந்துவிடும்.மனிதப்பண்புகள் மறக்கப்படும்.
ஒழுக்கச் சீர்கேடுகள் நடைபெறும்.
மொத்தத்தில் தனிமனித கட்டுப்பாடு மறைந்து
ஒழுங்கமைப்பு கெட்டுப் போய்விடும் என்கிறார்
வள்ளுவர்.

.English couplet ,:

" When water fails, functions of nature cease , you say ,
This when rain fails no men can walk in duty's
ordered way"

Explanation:

If it be said that the duties of life cannot be
discharged by any person without water
so without  rain there cannot be the
flowing of water .

Transliteration. :

"Neeindru amaiyaadhu ulakenin yaaryaarkkum
Vaanindru amaiyaadhu idhukku "

Comments