உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.....


     உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்......

    "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து "
                                   குறள். :        596
  உள்ளுவது _  நினைப்பது 
  எல்லாம்.  _  யாவும்
  உயர்வுள்ளல்  _ உயர்வாகவே நினைக்க
  தள்ளினும்  _  கைகூடாவிடினும் 
  தள்ளாமை _ கைவிட்டுவிடக் கூடாது
  நீர்த்து.  _ நீர்த்துப் போக விடாமல்,செயல்படுத்தாமல்ட

   நாம் நினைப்பன எல்லாம் உயர்வானதாகவே இருக்கட்டும்.
 நாம் நினைத்த உயர்வு கிட்டாமலேயே போனாலும் அதைக்
 கைவிட்டுவிடாது அந்த எண்ணத்தை நீர்த்துப் போகவிடாமல்
 இருத்தல் வேண்டும்.

 விளக்கம்  : 

  நாம் நினைப்பதெல்லாம் எப்போதும் 
  உயர்ந்ததாகவே   இருக்கட்டும்.
  அது கைகூடாமல் போகலாம். தப்பே இல்லை. 
  அதற்காக அந்த முயற்சியை மட்டும் ஒருபோதும்
  விட்டுவிடக் கூடாது.
  உங்களின் அந்த உயர்வான முயற்சி 
  பலராலும் பாராட்டப்படும்.
  அந்த பாராட்டுதலே செயல் நடந்து 
  முடிந்ததற்கு ஒப்பான உயர்வு மிக்கதாகும்.   
  
  ஒருவன் காட்டுமுயலை குறி தப்பாமல் 
  எய்தி வீழ்த்திவிட்டு  பெருமையோடு கையில்
  அம்பை எடுத்து வருகிறான்.அதைவிடச்
   உயர்வானது பருத்த உடம்புடைய
  யானையை குறி வைத்து எய்தி 
  அது தவறிவிட,
   அந்த வேலை தன்கையில் தூக்கிக்
   கொண்டு வருதலாகும்
   என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல்.
   
   எப்போதும் நம் எண்ணம் உயர்வானதாகவே இருக்கட்டும்.
   உயர்வான எண்ணமும் விடாமுயற்சியும் 
   இன்று இல்லை என்றாலும் என்றாவது 
   உயர்வைப் பெற்றுத்தரும்.
   
    "தெய்வத் தானாகா தெனினும் முயற்சிதன்
     மெய்வருத்தக் கூலி தரும் "
     என்கிறார் வள்ளுவர்.
     
    முயற்சி திருவினையாக்கும்.
    முயற்சி செய்வதிலிருந்து ஒருபோதும்
    பின்வாங்க வேண்டாம்.
    முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
      
       
  English couplet : 

" Whate'er you ponder , let your aim be lovely still
 Fate cannot hinder always , thwart you as it will "

Explanation: 

      In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him by fate, it will have the nature of not being thrust from him.

Transliteration :

"Ullavarkal thellaam  uyarvullal  matradhu
Thallinum thallaamai neerththu"  

Comments

  1. உயர்வான எண்ணமும்,முயற்சியும் வெற்றிக்கு அடித்தளம்.அருமையான கருத்து.

    ReplyDelete

Post a Comment

Popular Posts