உடுக்கை இழந்தவன் கைபோல...

      உடுக்கை இழந்தவன் கை போல...


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
  இடுக்கண் களைவதாம் நட்பு "
                                     குறள்  : 788
                                    

பொருள் :

உடுக்கை _ உடுத்தியிருக்கும் ஆடை
இழந்தவன் _ நழுவ விட்டவன்
கைபோல _ கை உதவுதல் போல
ஆங்கே _ அப்போதே
இடுக்கண்_ துன்பம்
களைவதாம்  _ அகற்றுவததாக இருப்பது
நட்பு _ நல்ல நட்பு

விளக்கம் :

ஆடை நழுவினால் ஒரு நிமிடம்கூட தாமதியாமல் கையானது
தானாகச் சென்று அதனைச் சரிசெய்வது போல நண்பனுக்கு ஒரு துன்பம் வரும்போது தானாக விரைந்து வந்து
உதவுதல்தான் நல்ல நட்பாக இருக்கும்.

English couplet

"   As hand of him whose vesture slips away ,
   Friendship at once the coming grief will stay."

Explanation

True friendship hastens to the rescue of the addicted as readily as the hand of one whose garment is loosened before an assembly.

Transliteration

Utukkai izhandhavan Kaipola Aange
Etukkan kalai varusam Natpu

   உடை நழுவினபோது கையானது யாருடைய கட்டளைக்காகவும்
காத்திருப்பதில்லை. அனிச்சை செயலாக விரைந்து வந்து மானம் காத்து நிற்கும்.இது கையினுடைய இயல்பு.
   அதேபோன்று தனது நண்பனுக்குத் துன்பம் வந்தவிடத்து
யாருக்காகவும் எதற்காகவும்  காத்திராமல் துன்பம்
கண்ட அந்த நேரத்திலேயே அந்தத்  துன்பத்தில் இருந்து
தன் நண்பனைக் காப்பாற்றுதல்தான் உண்மையான நட்பாக
இருக்க முடியும்.அவன் கேட்கட்டுமே என்று காத்திராமல்
தானாக முன் வந்து அக்கணமே துயர் துடைப்பது
நல்ல நட்பு கொண்ட ஒருவரின் செயலாக இருக்கும்.

ஆடையை வள்ளுவர் உவமையாகக் கூறக்காரணம்
ஆடை அழகுக்காக மட்டும் உடுத்தப்படுவது அன்று.
ஆடைதான் ஒரு மனிதனுடைய மானத்தைக் காத்து நிற்பது.   உடையை இழந்தவனுக்கு கையானது உடனடியாக
ஓடி வந்து   மானம் காத்து நிற்பதுபோல நண்பனின்
துன்பத்தை விரைந்து சென்று நீக்குபவன்தான்
நல்ல நண்பனாக இருக்க முடியும்.

நண்பனுக்கு ஆடையாக இருந்து மானம்
காத்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

      இந்த இடத்தில் இதைத் தவிர வேறு எந்த உவமை வைக்கப்பட்டாலும் இந்த அளவு ஏற்புடையதாக
இருக்க முடியாது. பொருளும் சொல்ல வந்த கருத்தும்
நச்சென்று மனதில் பதியும்படி இருப்பதற்கு
சொல்லப்பட்ட உவமை முக்கிய காரணமாக
அமைந்துள்ளது.     
         விரைந்து சென்று உதவுதல் வேண்டும்
என்று வெறுமனே சொல்லி இருந்தால் நட்பின்
ஆழம் எப்படி இருக்க வேண்டும்
என்பதை நம் மனதில் பதிய வைத்திருக்க முடியாது.
இப்போது உடை நழுவும் காட்சியை நம்
கண்முன் கொண்டு வந்து நிறுத்தி அதற்கு
கை ஆற்றும் செயலாக நம் உதவி இருக்க வேண்டும்.

பிறர் அறியுமுன்னே உதவுதல் வேண்டும்.
அதுவும் கேட்காமலே நடைபெற வேண்டும்.
  என்று  ஒரு காட்சியைக் கண்முன் கொண்டு
  வந்து  நிறுத்தி அதில் நம்மை கரைய வைத்து
  இப்படி இருக்க வேண்டுமைய்யா நட்பு என்கிறார்
வள்ளுவர்.
நகுதல் பொருட்டல்ல நட்பு என்றவராயிற்றே!
           மனதில் தைய்ப்பது போல இருக்கிறதல்லவா!

          
  இதுதாங்க நல்ல புலமைக்குக் கிடைத்த வெற்றி.              
         

Comments

Popular Posts