நச்சப் படாதவன் செல்வம்...
நச்சப் படாதவன் செல்வம்....
"நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று "
குறள். : 1008
நச்சப்படாதவன் _ விரும்பப்படாதவன்
செல்வம் _ பொருள்
நடுவூருள் _ ஊரின் நடுவே
நச்சுமரம் _ விஷத் தன்மை கொண்ட மரம்
பழுத்தற்று _ பழுத்தது போன்றது
ஒருவராலும் விரும்பப்படாதவன்கண் இருக்கும்
செல்வமானது ஊர் நடுவே நச்சு மரம் ஒன்று
காய்த்து கனிகளைத் தந்து நிற்பதற்கு
ஒப்பானதாகும்.
விளக்கம் :
ஊர் நடுவில் ஒரு மரம்
பூத்துக் குலுங்கி கிடக்கிறது.
ஆனால் இலை, பூ ,பழம்
எல்லாம் விஷத்தன்மை கொண்டது.
யாருமே பயன்படுத்திவிட முடியாது.
யாருக்குமே பயனில்லா இந்த
மரம் பூத்தென்ன?
காய்த்தென்ன ?
காயாது இருந்தென்ன ?
அது போன்றதுதான்
ஒருவருக்குமே உதவாதவன்
வீட்டில் நிறைய பொருள்
வைத்திருக்கிறான்.
யாருக்குமே உதவுவது இல்லை.
என்ன பயன்?
அவனிடம் பொருள் இருந்தென்ன?
இல்லாமல் போயென்ன ?
ஏழைக்கு உதவாதவனுடைய செல்வம்
நச்சுமரம் பழுத்துக் கிடப்பதற்கு
ஒப்பானது என்கிறார் வள்ளுவர்.
English couplet :
When he whom no man loves exults in great prosperity,
'Tis as when fruits in midmost of the town some poisonous tree.
English explanation :
The wealth of him who is disliked by all is like the fruit bearing
Of the etty tree in the midst of a town.
Transliteration. :
" Bachchan pataadhavan selvam Natuvoorul
Nachchau marampazhuth thattu "
Comments
Post a Comment