தமிழ்த்தாய் வாழ்த்து

                 தமிழ்த்தாய் வாழ்த்து

   'நீராருங் கடலுடுத்த...." எனத் தொடங்கும்
     தமிழ்த்தாய்  வாழ்த்துப் பாடல் தமிழை 
   ஆட்சி மொழியாகக் கொண்ட
   தமிழகத்தின் வாழ்த்துப் பாடலாகும்.
   இப்பாடலை எழுதியவர் மனோன்மணியம் 
   பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள்.
   இவர் எழுதிய நாடக நூலான மனோன்மணியம்
   நூலில் உள்ள வணக்கப் பாடலின் ஒருபகுதி
   தமிழ்த்தாய் வாழ்த்தாக வைக்கப்பட்டுள்ளது.
   இப்பாடலை 1970 ஆம் ஆண்டு கலைஞர் 
   கருணாநிதி அவர்களின் தலைமையின்கீழ் 
   செயல்பட்ட தமிழக அரசு தமிழ்த்தாய்
   வாழ்த்தாக அறிவித்தது.
   இதற்கு இசை அமைத்தவர் எம். எஸ்.விஸ்வநாதன்
   அவர்கள்.
   பாடல் இதோ :
   
   "நீராருங் கடலுடுத்த
   நிலமடந்தைக்
   கெழிலொழுகுகும்
   சீராரும் வதனமென
    திகழ்பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த
    திராவிடநல திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும்
    தரித்தநறுந் திலகமுமே
    அத்திலக வாசனைபோல்
    அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க
    இருந்தபெருந்
    தமிழணங்கே!
    தமிழணங்கே!

  உன் சீரிளமைத்
  திறம் வியந்து
  செயல்மறந்து
  வாழ்த்துதுமே
  வாழ்த்துதுமே
  வாழ்த்துதுமே!
  
      _   '  மனோன்மணியம்'  பெ.சுந்தரம் பிள்ளை


    புதுச்சேரி மாநில தமிழ்த்தாய் வாழ்த்து

புதுச்சேரி மாநில தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் 
 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.
 இவர் எழுதிய இசை அமுது என்னும் 
பாடல் தொகுப்பின் இரண்டாம் பகுதியின் முதல் பாடல்
தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர்
எல். கிருஷ்ணன் அவர்கள் ஆவர்.

புதுச்சேரி அரசின் அனைத்து விழாக்களும்
இந்தப் பாடலுடன் தொடங்கும்.

பாடல் வரிகள் இதோ :

வாழ்வில் செம்மையைச் 
செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த்தாயே 
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும் வெற்றியும் நீயே
தாழ்த்திடு நிலையினில்
உனைவிடுப்பேனோ
தமிழன் எந்நாளும் தலை குனிவேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும்
பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிர் நான்மறப்பேனோ? 
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை
உனக்களித்தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில்
எனக்குந்தானே
முந்திய நாளில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம்
புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே 

செழித்த என்தமிழே ஒளியே வாழி!
செழித்த என்தமிழே ஒளியே வாழி!
செழித்த என்தமிழே ஒளியே வாழி!

                                           _  பாரதிதாசன்

Comments

Popular Posts