பரியது கூர்ங்கோட்டது...
பரியது கூர்ங்கோட்டது....
வெரூஉம் புலிதாக் குறின் "
குறள். : 599
பரியது _ பெரிய உடம்பை உடையது
கூர்ங்கோட்டது _ கூர்மையான கொம்பை உடையது
ஆயினும் _ ஆனாலும்
வெரூஉம் _ அஞ்சும்
தாக்குறின் _ எதிர்த்து நின்றால்
விளக்கம் : யானை பருத்த உடம்பும் கூர்மையான
கொம்புகளையும் கொண்டது.
ஆயினும் ஊக்கம் கொண்டு புலி தாக்க
வருமானால் அதற்கு அஞ்சி நடுங்கி ஓடிவிடும்.
யானை பலசாலியான விலங்கு.
எதிரிகளைத் தாக்க வல்ல தந்தங்கள் உண்டு.
தூக்கி வீச தும்பிக்கை உண்டு.
இத்தனை இருந்தும் மனதில் ஊக்கம் கொண்ட
புலி தாக்க வருமானால் எதிர்த்து நிற்க இயலாமல்
தோற்றுப்போகும். காரணம் மனதில் ஊக்கம்
இல்லாததுதான்.
அதுபோன்று மனதில் ஊக்கம் கொண்டவர்களால்
எந்த செயலிலும் வெற்றி கொள்ள முடியும்.
ஊக்கம் இல்லாதவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்
ஊக்கம் உள்ளவர்களைக் கண்டால் அஞ்சி ஒதுங்குவர்.
என்பது இக்குறளின் கருத்தாகும்.
English couplet. :
". Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed "
Explanation :.
Although the elephant has a large body , and a sharp
tusk ,yet it fears the attack of the tiger.
Transliteration :
" Pariyadhu koorngottadhu Aayinum Yaanai
Verum pulidhaak kurian"
Good and simple way of explanation.Understood easily.
ReplyDelete