நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி....
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி...
"நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு "
குறள் : 995
நகை_ சிரிப்பு , மகிழ்ச்சி, விளையாட்டு
இன்னா _ துன்பம் தரும்
இகழ்ச்சி _ இகழ்ந்து பேசுதல், அவமதித்தல்
பகையுள்ளும் _ பகைவரிடத்தும்
பண்புள _ நற்பண்பு உள்ளவர்
பாடு _ வருத்தம் , அனுபவம் ,உலக ஒழுக்கம்
அறிவார் _ உணர்தல் , நினைத்தல்
மாட்டு ,_ அவ்வாறு செய்யார்
விளையாட்டுக்காக ஒருவனை இகழ்வாகப்
பேசினாலும் அது அவனுக்கு மன வருத்தத்தைக்
கொடுக்கும். ஆதலால் நல்ல பண்புடைய மக்கள்
பகைவரைக்கூட ஒருபோதும்
இகழ்வாக பேச மாட்டார்கள்.
விளக்கம் :
ஒருவனை இகழ்ச்சியாக பேசினால் அதனை
அவன் தனது தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட
சவாலாகவே எடுத்துக் கொள்வான்.
ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும்
பொறுத்துக் கொள்வான்.
தன் தன்மானத்தைச் சீண்டி விட்டால்
அதனை ஒருபோதும் பொறுத்துக்
கொள்ளவே மாட்டான்.
அவமதிப்பும் இகழ்ச்சியும் பிறருடைய
மனதை புண்படுத்தும்.
நண்பர்களுக்குள் விளையாடும்போது கூட
இகழ்வாகப் பேசக் கூடாது.
அது நண்பனுக்கு மிகுந்த மன
வருத்தத்தைத் தரும்.
நான் விளையாட்டுக்கல்லவா சொன்னேன்
என்று கூறினாலும் அவன் அதை எளிதாக
எடுத்துக் கொள்ளமாட்டான்.
நற்பண்புள்ள யாராக இருப்பினும்
தன் பகையாளியைக்கூட இகழ்வாகப்
பேசமாட்டார்கள். பகைவனுக்கும்
தன்மானம் உண்டு என்பதைப் புரிந்து
வைத்திருப்பதினால் ஒருபோதும்
அவமானப்படுத்திப் பேசமாட்டார்கள்.
ஆதலால் விளையாட்டுக்காகக் கூட
யாரையும் இகழ்வாகப் பேசாதீர்கள்.
அது அவர்கள் மனதில் தீராத
காயத்தை ஏற்படுத்தும்.
புத்தியுள்ள எவரும் இந்தக் காரியத்தை
ஒருபோதும் செய்யமாட்டார்
என்கிறார் வள்ளுவர்.
சில அவமானங்கள் ஒரு மனிதனை
தற்கொலை வரை கொண்டு செல்லும்.
அடிப்பதனால் வரும் வலியைவிட
அவமானத்தால் வரும் வலி கொடிது.
அனுபவித்தவர்களுக்குப் புரியும்.
வள்ளுவர் எவ்வளவு அனுபவித்து
எழுதியிருக்கிறார் பாருங்கள்.
யாரையும் விளையாட்டிற்குக்கூட
இகழ கூடாது. பாடறிந்து ஒழுகுவார் பிறருக்குத் துன்பந்தருவதை விலக்குவாராதலின்
பகைவருக்கும் நன்மையே செய்வார்
என்கிறார் வள்ளுவர்.
English couplet. :
"Contempt is though in sport.They who man's nature know,
E'en in their wrath, a courteous mind will show "
Explanation :
Reproach is painful to one even in sport , those who know the
nature of others exhibit (pleasing) qualities ,even when
they are hated.
Transliteration :
"Nakaiyullum innaa thikazhchchi pakaiyullum
Panpula paatarivaar maattu "
Comments
Post a Comment