கொக்கொக்க கூம்பும் பருவத்து.....

கொக்கொக்க கூம்பும் பருவத்து.....
"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து "
                    குறள்  :  490

கொக்கு _ மீனை விரும்பி உண்ணும் ஒரு பறவை
ஒக்க _ ஒத்திருக்க, போன்று
கூம்பும்  _ ஒடுங்கியிருத்தல் , காத்திருத்தல்
பருவத்து _ ஏற்ற காலம்வரை
மற்று _ அவ்வாறின்றி , ஆனால்
அதன் _ அதனுடைய 
குத்து _ கொத்துதல் ,
ஒக்க _ ஒத்திருக்க, போன்று
சீர்த்த இடத்து _ ஏற்ற காலத்தில்,
                           வாய்ப்பான நேரத்தில்

 

வாய்ப்பு சரியாக அமையும்வரை
கொக்கு காத்திருப்பதுபோல காத்திருக்க
வேண்டும். சரியான காலம்
வாய்த்ததும்  மீனைக் கண்டவிடத்து
 தனது குறி தப்பாமல் கொத்திச் செல்லும்
 கொக்கு போல செய்யும் செயலைத்
 தவறவிடாது செய்து முடிக்க வேண்டும்.

கொக்கானது நீர்நிலைகளுக்கு அருகில்
வெகுநேரம் ஒற்றைக் காலில் தவம்
இருக்கும். நீர் நிலைகளில் மீன்கள்
துள்ளி விளையாடுவதை  கண்டு
கொள்ளாததுபோல அமைதியாக நிற்கும்.
ஆனால் சரியாக மீன் அருகில் வந்ததும்
விருட்டென்று பாய்ந்து சென்று
மீனைக் கொத்தித் தூக்கி வந்துவிடும்.
இரையில் குறியாக காத்திருக்கும்
பண்பு கொக்குக்கு உண்டு.

அதுபோல ஒரு செயலைச் செய்வதற்கு
ஏற்ற  காலம்  பார்த்து காத்திருக்க
வேண்டும். சரியான காலம் கனிந்து
வந்ததும் செயலில் இறங்க
வேண்டும். அப்போதுதான் நாம்
நினைத்த காரியம் வெற்றி பெறும்.
ஆத்திரத்தில் செயல்படத் தொடங்கினால்
எல்லாம் தாறுமாறாகப் போய்விடும்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்.
நிதானமாக செயல்படுங்கள்.
ஏற்ற காலம் வரும்வரை  காத்திருங்கள்.
காலம் கனிந்ததும் செயலில் இறங்குங்கள்.
வெற்றி நிச்சயம் என்பது வள்ளுவர் கருத்து.


English couplet : 

As heron stands with folded wing, so wait it waiting hour,
 ,As heron snaps its  prey , when fortune smiles, put
forth your power.

Explanation ": 

At the time one should use self control, let him restrain himself 
like a heron and let him like it,strike ,when there is a favourable
opportunity.
Transliteration : 

"  Kokkokka koompum paruvaththu matradhan
  muththukkal seerththa itaththu"

Comments

  1. அனிமேஷன் படம் மிக அற்புதம்.குறளுக்கு ஏற்ற படத்துடன் விளக்கம் மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts