சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்...

            சொல்லுகச் சொல்லைப்.....

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
 வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து "
                                        குறள்  :  645

  சொல்லுக  _ சொல்வாராக 
  பிறிதோர்சொல் _ வேறு ஒரு சொல் 
  அச்சொல்லை  _ அந்தச் சொல்லை 
  வெல்லுஞ்சொல் _ வெல்ல வல்ல சொல் 
  இன்மை  _  இல்லாதிருத்தல்
  அறிந்து _  தெரிந்து கொண்டு 

விளக்கம் :-
 
தாம் சொல்லக் கருதிய  சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை 
அறிந்து அதன் பின்னரே பேசுதல் வேண்டும்.

 English couplet :
 
     "Speak out your speech , when once 'tis past dispute
     That none can utter speech that shall your speech refute "


Explanation : 

    Deliver your speech after  assuring yourself that 
  no counter speech can defeat your own .

 Transliteration. : 

    " solluka sollai piRidhoarsol achchollai
     vellikkilamai unmai aRindhu "

   தான் சொல்ல வந்த சொல்லைப் பிறிதொரு சொல்
   வென்றுவிடும் என்னும் அளவுக்கு உயர்வான சொல்லை
   அறிந்து அதன்பின்னரே பேசுதல் வேண்டும் 
   சொல்லக் கருதிய சொல்லைப் பிறிதொருசொல்லால்
   வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து
    பேசுக.
   ஆத்திரத்தில் ஆராயாது சொற்களைக் 
   கொட்டிவிடக் கூடாது. 
   பின்னர் எதிராளி நம்மை சொல்லால் 
   மடக்கிய பிறகு அவமானப்பட்டு நிற்க வேண்டும்.
   பிறர் பேச வாய்ப்பளிக்காத சொற்களைத் தேடிப் பேசுக.
   உயர்வான, சொல்ல வந்த கருத்துக்கு 
   ஏற்புடைய சொற்களைப் பேசுக.
     மொத்தத்தில் நாம் சொல்லும் சொல்லைவிட 
சிறந்த சொல் இல்லை என்பதை 
அறிந்த பின்னர் பேச வேண்டும்.
   தாம் சொல்லக் கருதிய சொல்லினும் வேறு ஒரு சொல் சிறந்தது இல்லை என்பதை அறிந்து சொல்லுதல் வேண்டும்.
   

Comments

Popular Posts