சொல்லுக சொல்லிற் பயனுடைய...

      சொல்லுக சொல்லிற் பயனுடைய....
    "சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல் "
                                         குறள் :  200

சொல்லுக  _ பேசுக
சொல்லிற்  _ சொல்ல வேண்டுமிடத்து
பயனுடைய  _ பயனை விளைவிக்கக் கூடிய
சொல்லற்க _ சொல்லக் கூடாது
சொல்லிற்  _ சொற்களில்
பயனிலா  _  நன்மை தராத , பொருளற்ற
சொல் _ பேச்சு ,  மொழி


 சொல்லும் சொற்கள் பிறருக்கு பயன்தரும்
 விதத்தில் சொல்லுதல் வேண்டும்.
 எந்தவிதத்திலும் பயன்தராத
  சொற்களை ஒருபோதும் 
  பேசுதல் கூடாது.

விளக்கம் :

சொல்லுக என்று சொல்லுவதனால் 
பேச வேண்டும் . பேசாதிருத்தல் கூடாது.
அப்படிப் பேசும்போது 
பயனுள்ள சொற்களை 
மட்டுமே பேச வேண்டும்
என்கிறார் வள்ளுவர்.

சிலர் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
முடிவில் என்ன பேசினார்கள் என்பது
அவர்களுக்கும் தெரியாது.
நமக்கும் தெரியாது. கேட்டவருக்கு 
எந்தவிதத்திலும்  பயனில்லாத 
சொற்களைப் பேசி என்ன பயன் ? 
அப்படி பேசுவதைவிட 
பேசாதிருத்தலே நலம் பயக்கும்.

இதில் இன்னொரு கருத்தும் உள்ளது.
அதாவது வழவழவென்று  பேசாதீர்.
என்ன பேச வேண்டுமோ அதையே 
சுருக்கமாக தெளிவாக பிறர்
பயன்படும் விதத்தில் பேசுக
என்றும் பொருள் கொள்ளமுடியும்.

வெற்றுப் பேச்சும் வேண்டாதப்
பேச்சும் வேண்டாம்.
பேச நேர்ந்தால் பயனுடைய
சொற்களை மட்டுமே பேசுக.

English couplet : 

   " If speak you will speak words that fruit afford 
    If speak you will speak never fruitless word "


 Explanation : 
 
    Speak what is useful and speak not useless words.


   Transliteration : 

            " Solluka sollir payanutaiya sollarka
             Sollir payanillaach chol "

   

Comments

Popular Posts