மோப்பக் குழையும் அனிச்சம்....

மோப்பக் குழையும் அனிச்சம்....

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து  "
                           குறள்   :  90

மோப்ப  _ முகர்ந்து பார்த்ததும்
குழையும் _ வாடிவிடும்
அனிச்சம் _ ஒரு வகை மலர்
முகந்திரிந்து _ முகம் வேறுபட்டு
நோக்க  _ பார்க்கும் போது
குழையும்  _ சுருங்கும், வாடும்
விருந்து  _ ,விருந்தினர்


அனிச்ச மலர் முகர்ந்து பார்த்ததுமே வாடிவிடும்.
முகத்தில் மலர்ச்சி இல்லாமல் முகங்கோணி
இருப்பதைப்  பார்த்ததுமே 
விருந்தினர்  முகம் வாடிவிடுவர்.

விளக்கம்  :

 அனிச்சம் மலர் என்று ஒரு மென்மையான மலர்
 இருந்ததாக சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
 அந்த மலரானது நாம் முகர்ந்து பார்ப்பதற்காக 
 முகத்தை அருகில் கொண்டு சென்றாலே போதும்.
 அப்படியே  வாடி விடுமாம்.
 
ஆனால் விருந்தினர்  அருகில் 
சென்று பார்க்க வேண்டியதில்லை.
தூரத்தில் இருந்து வரும்போதே 
நம் முகக் குறிப்பின்மூலம்
விருப்பு வெறுப்பைப் புரிந்து
கொள்வர்.
 முகம் சற்று கோணி
இருந்தால் போதும் .விருந்தினரின்
முகம் அப்படியே கூம்பிவிடும்.
அதற்குபின்னர் அங்கு இருக்கப் பிடிக்காது.
வேண்டா வெறுப்பாக நினைக்கிறார்கள் 
என்ற நினைப்பு வந்து முகம்
வாடிப் போய்விடும்.
ஏன்தான் வந்தோமோ என்று
மனம் வருந்தும். 
அதன் பின்னர் அந்த வீட்டில் 
சாப்பிட மனம் இருக்காது.
இருக்க பிடிக்காது.
ஒரு மடக்கு தண்ணீர் கூட குடிக்க
மனம் வராது .

எவ்வளவு அருமையாக
அறிந்து வைத்துள்ளார் திருவள்ளுவர்.
ஒருவேளை திருவள்ளுவருக்கும்
 நமக்குக் கிடைத்த அனுபவம் 
 கிடைத்திருக்குமோ 
என்று தோன்றுகிறதல்லவா!
இருக்கும்...இருக்கும்.
English couplet. : 

"The flower of 'Anicha' withers away, if you do but it's
Fragrance inhale;
If the face of the host cold welcome convey , the guest's heart within him will fail "

Explanation. :. 

   "As the anichcham  flower fades in  smelling , so fades
   the guest when the face is turned away "

Transliteration. : 


"Moppak kuzhaiyum Anichcham mukandhirindhu
Nokkak kuzhaiyum virundhu "








Comments

Popular Posts