பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்....
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்....
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை."
_ குறள். 322
பகுத்துண்டு _ பகிர்ந்து உண்டு
பல்லுயிர் _ பல உயிர்களையும்
ஓம்புதல் _ பாதுகாத்தல்
நூலோர் _ அறநூல் ஆசிரியர்கள்
தொகுத்தவற்றுள் _ தொகுத்துத் தந்தவற்றுள்
எல்லாம் _ அனைத்திலும்
தலை _ தலையாய அறமாகும்
விளக்கம் : நம்மிடம் இருக்கும் உணவை பசியில்
இருப்போருக்கு பகிர்ந்து
கொடுத்து உண்ணவேண்டும்.
இவ்வாறு பல உயிர்களையும் பாதுகாக்க
வேண்டும் என்ற பண்பானது அறங்கள்
என்று நூல்களில் சொல்லப்பட்ட
எல்லா அறங்களிலும் தலையாய
அறமாகக் கருதப்படும்.
நாம் மட்டும் உண்டு உயிர் வாழ்தல் சிறப்பாகாது நம்முடைய உணவை பிறரோடு பகிர்ந்து உண்ணும்
பண்பு வேண்டும்.
நமக்கு எதிரே இருப்பவர் பசியால்
அமர்ந்திருக்க நாம் மட்டும் உண்ணுதல் கூடாது.
அவருக்கும் உணவளித்து உண்போமானால்
ஒரு உயிரைப் பாதுகாத்த புண்ணியம் வந்து சேரும்.
ஆதலால் பிறருக்கு உணவளித்து
உண்ணுதலே அறச்செயல்கள் என்று நூல்களில்
சொல்லப்பட்ட எல்லா அறத்திலும்
தலையாய அறமாகக் கருதப்படும்.
வள்ளுவர் பிறருக்குப் பகிர்ந்து உண்ணுங்கள்
என்று சாதாரணமாக சொல்லிவிட்டுச் செல்லவில்லை.
பல்லுயிர் ஓம்புக என்று கூறுகிறார்.
ஓம்புக என்றால் பாதுகாக்க என்பது பொருளாகும்.
அதாவது பசியால் வாடும் உயிர்களைக்
பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு
மனிதனுக்கும் உண்டு.
பசி என்று வந்து நிற்பவர்களுக்கு
உணவளித்து அதன் பின்னர் உண்க ...
அதுதாம்பா... அறங்களில் எல்லாம் தலையாய அறம்.
மற்ற தர்மங்கள் எல்லாம் அதற்குப் பின்னர்தான்
என்று கூறுகிறார் வள்ளுவர்.
என்னிடம் என்ன இருக்கிறது கொடுப்பதற்கு
என்று சொல்வது கொடுக்க மனமில்லாமையையே காட்டுவதாகும்.
பகுத்துண்டு என்று கூறியதின்மூலம்
இருப்பதைப் பகிர்ந்து உண்ண வேண்டும்
என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது.
நாம் எங்கும் போய் அறஞ்செய்யப்
போக வேண்டிய அவசியம் இல்லை.
இருப்பதைப் பகிர்ந்தளித்தாலே போதும்.
ஆதலால் பகுத்துண்ணும் பண்பை
வளர்த்துக் கொள்ளுங்கள் என்னும்
பொதுமை சிந்தனையைப் புகட்டியுள்ளார்
திருவள்ளுவர்.
English couplet. :
" Let those that need partake your meal;guard everything that
lives
This the chief and sum of lore that hoarded wisdom gives"
Explanation :
The chief of all the virtues which authors have summer up ,is the
partaking of food that has been shared with others,and the
preservation of the manifold life of other creatures.
Transliteration :.
" Pakuththuntu palluyir ompudhal noolor
Thokuththavatrul ellaam thalai "
பகுத்துண்பதை விளம்பரப்படுத்தவே அநேகர் விரும்புகின்றனர்.அறஞ்செய்வதை நம் இருப்பிடத்திலிருந்தே செய்யலாம் என்பதை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்.
ReplyDeleteபல மனிதர்கள் என்ற பொருள் இல்லாமல் பல உயிர்கள் என்று ஏன் கூறினார்..? ஏன் இந்த 'பல்லுயிர்' என்ற வார்த்தையை யாருமே விரிவாக்கமாக பார்த்ததில்லை...?
ReplyDelete