அசை ( யாப்பிலக்கணம் )

                            
                              அசை 
                     (   யாப்பிலக்கணம்)

 ஒரு செய்யுளை யாத்தலுக்கு அதாவது கட்டி உருவாக்குதலுக்க எழுத்து,அசை, சீர் ,
அடி ,தொடை ,தளை போன்ற 
உறுப்புகள்  தேவையாக உள்ளன.

    எழுத்துகள் சேர்ந்து அசையாக வருகின்றன.
   எழுத்துக்களின் குறிப்பிட்ட  வரையறைக்கு
    உட்பட்ட   பகுப்பு அசை எனப்படும்.
    
    ஓசை விட்டு விட்டு சேர்வதனால் அதனை அசை என்பர்.
      அசைகள் சேர்ந்து சீர் உருவாகிறது.
      
    அசையானது நேரசை நிரையசை என இரண்டு வகைப்படும் என்பது யாப்பருங்கலக் காரிகை 
குறிப்பிடும் அசைகளாகும்.
  ஆனால் தொல்காப்பியத்தில் நேரசை , நிரையசை ,
   நேர்பு , நிரைபு என்று நான்கு அசைகள் உள்ளதாக 
    கூறப்பட்டுள்ளது.

                                     நேரசை

    நேரசை நான்கு நிலைகளில் வரும்.

   1  .குறில் எழுத்து மட்டும் தனித்துவரும்.

              க  _   குறில் எழுத்து

  2.  குறில் எழுத்தோடு ஒற்றும் இணைந்து வரும்.

              கல்  _  குறில் + ஒற்று
  
3.   நெடில் எழுத்து மட்டும் தனித்து வரும்.

                கா _  நெடில் எழுத்து
                
 4 .   நெடில் எழுத்தோடு ஒற்றும் இணைந்து வரும்.

                    கால்  _  நெடில்  +  ஒற்று 


                                நிரையசை 

   நிரையசை நான்கு நிலைகளில் வரும்.
   
 1 .இரண்டு குறில் எழுத்துகள் மட்டும் தனித்து வரும்.
 
     கிளி    _  இரண்டு குறில் எழுத்துகள்
     
2.  இரண்டு குறில் எழுத்துகளோடு ஒற்றும் இணைந்து வரும்.

      மயில்  _   இரண்டு குறில்  +  ஒற்று 

3.   குறில் எழுத்தோடு நெடில் எழுத்தும் சேர்ந்து வரும்.

         புறா   _  குறில் நெடில் எழுத்துகள்.

4.  குறில் நெடில் எழுத்துகளோடு ஒற்றும் இணைந்து வரும்.

      இறால்  _  குறில் நெடில்  +  ஒற்று


யாப்பருங்கலக்காரிகை ஆசிரியர் அமுத சாகரர்,

"  குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் 
                                           குறில்நெடிலே
நெறியே வரினும் நிறைந்துஒற்று அடுப்பினும்
                                                      நேர்நிரையென்
       
அறிவேய்   புரையும் மென்றோளி உதாரணம்
                                               ஆழி வெள்வேல்
                                  
வெறியே சுறாநிறம் விண்தோய் விளாம்
                                    என்றுவேண்டுவரே ! "       

என்கிறார்.                                                                         

                            யாப்பருங்கலக்காரிகை  :  5




தொல்காப்பியம்,

"   குறிலே நெடிலே குறிலிணை குறில் நெடில்
   ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி
   நேரும் நிரையும் என்றிசின் பெயரே "
   
                 தொல்காப்பியம்_ பொருளதிகாரம் :312
  
என்று கூறுகிறது.

அதன் பின்னர் நேர்பு, நிரைபு பற்றிக்கூறும்போது
நேர்,நிரை அசைகள் குற்றியலுகரம்,முற்றுயலுகரம்
 என்பனவற்றுள் ஒன்றை இறுதியில் பெற்று
 ஒரே சொல்லின்தன்மையைக் கொண்டிருக்குமானால்
 அவை நேர்பு, நிரைபு என்னும் இருவகை அசைகளாகும்
 என்கிறார் தொல்காப்பியர்.
 
 
 ஆனால் தனிக் குற்றெழுத்துகள் கொண்ட நேரசையின்
 பின் இங்ஙனம் இருவகை உகரமும் வந்து
 நேர்பு அசை என்று கூறப்படலாகாது.
 

"   இருவகை உகரமொ டயைந்தவை வரினே
   நேர்பும் நிரைபும் ஆகும் என்ப
   குறிலிணை உகரம் அல்வழியான"

     என்கிறது தொல்காப்பியம்  _  
     பொருளதிகாரம் :313 வது நூற்பா.
     
                
   இதில் நேரசை, நிரையசை இரண்டும்
   இயலசை எனப்படும்.
   நேர்பு ,நிரைபு இரண்டும் உரியசை எனப்படும்.

    " இயலசை முதலிரண் டேனவை உரியசை "

                    தொல்காப்பியம்_  பொருளதிகாரம் :314

  மொத்தத்தில் அசையானது நேரசை, நிரையசை 
என இரண்டு வகைப்படும்.
 நேர்பு , நிரைபு ஆகிய அசைகள் ஓரசைக்கு உரியவை.
அவை  பெரும்பான்மையாக அடியின் 
இறுதியில் வரும் அசையாக இருக்கும்
என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்க.

 ஒரு செய்யுளை அலகிட்டுப் பார்த்தால்
மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக "

 கற்க _          கற்/  க

கற். _குறில் ஒற்றுடன்     _ நேரசை
க _    தனிக்குறில்.            _  நேரசை

கசடற                கச/ டற

 கச   _   குறிலிணை  _ நிரையசை
டற  _       குறிலிணை  _  நிரையசை

கற்பவை          கற்/ பவை

   கற்      _    குறில் ஒற்றுடன்    _ நேரசை
   பவை  _    குறில் நெடில்          _  நிரையசை

கற்றபின்            கற்/ றபின்

  கற்     _  குறில் ஒற்றுடன்             _ நேரசை
றபின்  _  குறிலிணை ஒற்றுடன்  _ நிரையசை

நிற்க               நிற் / க

 நிற்   _ குறில்  ஒற்றுடன்  _ நேரசை
  க       _  குறில் தனித்து     _  நேரசை

அதற்குத்          அதற்/ கு

    அதற் _  குறிலிணை ஒற்றுடன்  _ நிரையசை
      குத்   _ குறில் ஒற்றுடன்               _     நேரசை

தக               தக/

 தக  _   குறிலிணை      _    நிரையசை

நினைவிற் கொள்க .

1.  ஒற்றெழுத்தைத் தனியாக பிரிக்கக்கூடாது
 ஒற்றெழுத்தை அதற்கு முந்தைய எழுத்தோடு
 சேர்த்து  அசை பிரிக்கப்படும்.

 2. இரண்டு குறில் எழுத்துகள் சேர்ந்து அதாவது
குறிலிணை தனிஅசையாக பிரிக்கப்படும்.
 ஆனால்இரண்டு நெடில் எழுத்துகளைச்
 சேர்த்து அசை பிரித்தல் கூடாது.
அதாவது இரண்டு நெடில் எழுத்துகள் சேர்ந்து வருமானால்
அவை தனித்தனி அசைகளாக பிரிக்கப்பட வேண்டும்.

3. குறில் நெடில் என்று அசை பிரிக்கப்படும்.
   நெடில் குறில் என்று அசை வராது.
   நெடில் குறில் என்று வரும் போது
    அவை தனித்தனி அசைகளாக பிரிக்கப்பட 
   வேண்டும்.
 
 கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளை
அலகிட்டுப் பயிற்சி செய்க.

"சொல்லுக  சொல்லைப்  பிறிதோர்சொல்  அச்சொல்லை
வெல்லுஞ்சொல்  இன்மை  அறிந்து"
  

     


      
 
    
        

Comments

  1. Really it's a wonderful and brief explanation.I think soon I can write a poem my own.

    ReplyDelete
  2. எழுசீர் விருத்தம்
    விளம் மா விளம் மா
    அந்தமும் ஆதி யும்இல்லா வடிவாம்

    ReplyDelete
  3. மேல் உள்ள மாதிரி எழுதினால் சரியா?

    ReplyDelete

Post a Comment

Popular Posts