சுயமதிப்பும் மதிப்பீடும்

சுயமதிப்பும் மதிப்பீடும்

"உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
 வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
 தலை வணங்காமல் நீ வாழலாம்."

எவ்வளவு அருமையான பாடல் இல்ல..

முதலாவது நம்மைப்பற்றி
நன்கு தெரிந்து வைத்துக் கொள்ளணுங்க..
அப்போதுதான் உலகத்தை ஜெயிக்க முடியும்.
எவர் முன்னும் தலை குனிந்து நிற்கும்
வாய்ப்பு வராது.

இதுதாங்க உண்மை.
நம்மை ப் பற்றியே நமக்குச் சரியான 
புரிதல் இல்லை என்றால் யார் புரிந்து
கொள்ளப் போகிறார்கள்.?

நாமே நம்மை மதிக்கவில்லை
 என்றால் நம்மை பிறர்
எப்படி மதிப்பார்கள்?

எப்போதும் சுய மதிப்பும் 
மதிப்பீடும் அவசியம்.
நம்மைப் பற்றிய மதிப்பீடு
தெரியும்போதுதான் நமது நிறை
குறைகளை நாம் தெரிந்து கொள்ள
முடியும்.

குறைகளைக் களைந்து அடுத்தக்
கட்டத்தை நோக்கிய நகர்ச்சிக்கு
அது உதவியாக இருக்கும்.

 சுயமதிப்பு குழந்தைப் பருவத்தில் இருந்தே
 தொடங்கிவிடும்.
 
 சுயமதிப்பு தெரிந்தவர் பிறர் 
 உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்
 பண்பு கொண்டவராக இருப்பார்.
 மற்றவர்கள்மீது குறை காணும்முன்பு
 ஆயிரம்முறை தன்னைப்பற்றி யோசிப்பார்.
 
 பத்தோடு பதினொன்று. அத்தோடு 
 இது ஒன்று என்று எதிலும் சிரத்தை இல்லாது
 இருக்கும் சாதாரண மனிதனாக 
 இருக்க மாட்டார்.
  பொறாமைப்படும் எண்ணமே வராது.
 
 பேச்சு ஒரு மாதிரியாகவும் செயல்
 அதற்கு எதிர்மாறானதாகவும் இருக்காது.
 புரட்டிப்புரட்டிப் பேசும் பண்பு எட்டிப் பார்க்க
 வாய்ப்பே இருக்காது.
 
 அடுத்தவர்கள் செய்யும் நற்செயல்களைப்
 பாராட்ட வேண்டும் என்ற உயரிய 
 சிந்தனை இருக்கும்.
 
 நாமே எல்லாவற்றையும் தெரிந்து
 வைத்திருக்க வேண்டும் என்று
  எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம்
  வந்துவிடும்.
  
 எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும்
 என்ற தணியா வேட்கை இருக்கும்.
 
 தமது தரத்தை உயர்த்த வேண்டும் என்ற 
 உத்வேகத்தோடு செயல்படுவார்.
 
நமது மனது நாம் பழக்கி வைத்ததற்கு 
ஏற்பதான் இயங்கும்.

நமது சிந்தனையும் நமது நடத்தையும்தான் 
நம்மை உயரே தூக்கிவிடும்.

இவை வெளியில் எங்கிருந்தும் நமக்குக்
கிடைக்கப்போவதில்லை.

நமக்குள்ளிருந்து புறப்படுபவைதான்
நமது பேச்சும் செயலும்.

தன்னைப்பற்றிய எல்லா செயல்களும்
தூய்மையானதாக இருக்க வேண்டும்
என்ற உணர்வு சுயமதிப்பீட்டாளர்களிடம்
மிகுந்திருக்கும்.

சுயமதிப்பீடு செய்ய இயலாதவர்
வெற்றியாளராக இருக்கமுடியாது.

முன்னேற்றப்பாதையில் நடைபோட
சுயமதிப்பும் மதிப்பீடும் அவசியம்.






 

Comments

  1. வாழ்க்கைத் தத்துவம் மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts