எண்ணித் துணிக கருமம்...

          எண்ணித் துணிக கருமம்...


"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு "
                                      குறள் :  467

எண்ணி _ ஆராய்ந்து பார்த்து
துணிக _ தீர்மானிப்பீராக
கருமம் _  செயல்
துணிந்தபின் _துணிந்துவிட்ட பின்னர்
எண்ணுவம் _  ஆராய்ந்து கொள்ளலாம்
என்பது  _  என்று சொல்வது
இழுக்கு  _  தவறு


நன்றாக சிந்தித்து அதன்பிறகே ஒரு
செயலில் இறங்க வேண்டும்.
செயலைத் தொடங்கிய பின்னர் அதைப்
பற்றிப் சிந்தித்துக் கொள்ளலாம் 
என்பது தவறு.

விளக்கம்  : 
 ஒரு செயலை செய்யத் தொடங்கும்
 முன்னர் ஆயிரம்முறை யோசிக்க வேண்டும்.
 அதனால் வரும் சாதக பாதகங்களைப் பற்றி
 சிந்திக்க வேண்டும்.
 நம்மால் கூடுமா...கூடாதா
 என்ற ஆராய்ச்சி வேண்டும்.
 இதனால் என்னென்ன பலன்
 கிடைக்கும் என்பதைப் பற்றி எண்ணிப் 
 பார்க்க வேண்டும்.
 இதனால் ஏதேனும் பாதிப்பு வருமா? 
 என்ற நோக்கிலும் ஆராய வேண்டும்.
 இவ்வாறு பல்வேறு கோணத்தில்
 ஆராய்ந்த பின்னரே செயலில்
 இறங்க வேண்டும்.
 பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
வந்தது வரட்டும் பிறகு பார்த்துக்
கொள்ளலாம் என்றால் அது தவறாகப்
போய்விட வாய்ப்பு உள்ளது.

செய்ய வேண்டும் என்ற துணிவோடு
வேலையில் இறங்கிவிட்டால்
அதன் பின்னர் அதைப் பற்றி 
எண்ணிக் கொண்டிருப்பது தவறு
என்கிறார் வள்ளுவர்.

 English couplet : 

"Think, and then dare the deed ! Who cry ,"Deed dared,
We'll think ," disgraced shall be "

Explanation :

Consider and then undertake a matter, after
having undertaken it,to say "we will consider,"
Is folly.

Transliteration : 

"Ennith thunika karumam thunindhapin
Ennuvam enpadhu izhukku "

 

Comments

Popular Posts