வெள்ளிவிழா வாழ்த்து

    வெள்ளிவிழா வாழ்த்து


   நெல்லை தமிழுலா நெடிய புகழுலா
     நல்லோர் உறைதலா( ல்)  டோனாவூர் பேருலா
     மாண்புலா எட்வர்ட் அன்னபாக்கியம் மடியுலா
     மருவிலா எட்வின் அன்புராஜ் மகன் பிறத்தலா!

     பால்நிலா மங்கை துளசி கரம் பிடித்தலா
     தேனிலா கண்டு உவத்தலா ஜெசுவரல் தழுவலா
     தீங்கனிச் சுவையுலா தெய்வீக அருளுலா
     மாந்தர் மகிழ்வுலா மகிழ்ச்சி நிறைதலா!

     வெள்ளிவிழா காணலால் வேர்ப்பலா சுவைத்தலா
     உள்ளி மகிழ்தலா வெள்ளிடை மனத்திலா
     தெள்ளிய மொழிநடை  அள்ளிப் பருகலா
     பள்ளி புகழுலா பதவி உயர்தலா!

    கற்றலா கற்பித்தலா விரலிடை இசை மீட்டலா
    அயர்விலா துழைத்தலா அளவிலா புகழடைதலா
    மிஞ்சு புகழுலா மிகை அறத்திலா
    எஞ்சிய நாளுலா எல்லையில்லா மகிழ்விலா!

   மாசிமாத கொண்டலா மாலை நேரத் தென்றலா
  அதிரா நடையுலா அழகுத் தேருலா
  புரியா புதிரென முதிராதோர் புலம்பலா
   ஈடில்லா நலம் வந்து இல்லத்தை நிறைத்தலா !

 வெள்ளிவிழா நினைவுலா நெஞ்சில் நிறைதலா
 பொன்விழா கனவு வந்து தாலாட்டலா
 மணிவிழா மகுடம் சூட்ட காத்திருத்தலா
நூற்றாண்டுவிழா வாழ்த்துரைக்க நாள் கேட்டலா!
     

Comments

Popular Posts