கள் என்ற பன்மை விகுதி வரும் இடங்கள்
கள் என்ற பன்மை விகுதி வரும் இடங்கள்
கள் 'என்னும் பன்மை விகுதியைக் கையாள்வதில்
நமக்கு பல்வேறு சந்தேகங்கள் உண்டு.
ஆளாளுக்கு கள்ளை கண்டமேனிக்குப்
பயன்படுத்துவார்கள்.
' கள் 'அஃறிணைப் பன்மைக்கு மட்டுமே
உரியதாக தொல்காப்பியர் கூறுவார்.
" கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே
கொள்வழி உடைய பலஅறி சொற்கே "
அஃறிணையில் பன்மை வடிவங்கள் :
மரம் + கள் = மரங்கள்
யானை + கள் = யானைகள்
' கள் 'சேர்க்காமலும் அஃறிணை
இயற் பெயர்கள் வரும்.
அவை முடியும் வினைகளைக் கொண்டு
ஒருமையா அல்லது பன்மையா என்பதை நாம்
தெரிந்து கொள்ளலாம்.
" தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே "
விகுதி இல்லாமல் வரும்
அஃறிணைப் பெயர்கள் தமக்கு
முன்னோ பின்னோ வரும் பன்மை
வினை முற்றுகளால்
அறியப் படுகின்றன.
நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு எழுத்து
சொற்களுக்குப் பின்னால் வல்லினம் மிகாது.
மாடு + கள் = கள்
ஆடு + கள் =ஆடுகள்
பசு , மரு , கணு போன்ற குறில் எழுத்துகளில்
தொடங்கும் சொற்களுக்குப்பின் வல்லினம்
மிகும்.
பசு + கள் = பசுக்கள்
மரு + கள் = மருக்கள்
கரு + கள் = கருக்கள்
கணு + கள் = கணுக்கள்
குறில் எழுத்துக்குப் பின் உகரம் வந்தால் வல்லினம்
மிகாது.
வரவு + கள் = வரவுகள்
செலவு + கள் = செலவுகள்
க் , ச், ட் , த் , ப் , ற் போன்ற வல்லெழுத்தைத்
தொடர்ந்து வரும் உகர எழுத்தின் பின்
வல்லினம் மிகாது.
வாக்கு + கள் = வாக்குகள்
கணக்கு + கள் = கணக்குகள்
வாத்து + கள் = வாத்துகள்
தோப்பு + கள் = தோப்புகள்
வாழ்த்து + கள் = வாழ்த்துகள்
ஆனால் தொல்காப்பியர், நச்சினார்கினியர் ஆகியோர்
வாழ்த்துக்கள் என்று எழுதியுள்ளனர்.
வாழ்த்துக்கள் என்பதில் உள்ள உணர்வு
வாழ்த்துகள் என்று சொல்வதில் இல்லை
என்பது உண்மை.
ஆனால் அகஞ்சார்ந்த உணர்வுகளைக் கூறும்
சொற்களுக்கு 'கள் ' பயன்படுத்தாமல்
இருப்பது நன்று .
அதாவது வாழ்த்து , நன்றி , வணக்கம் ஆகியவை
அகஞ் சார்ந்த செயல்கள் .
அதாவது உணர்வு சார்ந்தவை.
அதனால் நன்றிகள் , வாழ்த்துகள் , வணக்கங்கள்
என்று கூறுதலும் எழுதுதலும் தவறுதலாகவே
கருதப்படும்.
அன்புகள் என்று எழுதுவதோ சொல்லுவதோ
கிடையாது.
அதுபோல,
நன்றி, வணக்கம், வாழ்த்து போன்ற
சொற்களிலும் கள் சேர்க்காமல் எழுதுவதுதான்
சிறந்தது.
திருமண வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்து
தீபாவளி வாழ்த்து
கிறிஸ்துமஸ் வாழ்த்து
என்று எழுதுவோம். பிரச்சினையே எழாது.
மிகவும் பயனுள்ள பதிவு.
ReplyDeleteநன்றாக புரிந்தது
ReplyDelete