பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்...

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்...


"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்  "
                         குறள்  : 505

பெருமைக்கும் _ சிறப்புக்கும்
ஏனை _ மற்றும்
சிறுமைக்கும் _குறைபாட்டிற்கும்
தத்தம் _ அவரவர்
கருமமே _ செய்கையே
கட்டளை _ உரைகல்

ஒருவருடைய சிறப்புக்கும் தாழ்வுக்கும்
அவரவர் செய்கைகளே உரைகல்லாகும்.

உரைகல் என்பது தங்கத்தை உரசிப் பார்க்க
பயன்படும் ஒருவித கல்லாகும்.
உலோகத்தின் தரத்தைக் கல்லில்
உரசிப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதுபோல ஒருவனுடைய
தரத்தை அவனுடைய செயலை வைத்து
அறிந்து கொள்ள முடியும்.

நமது உயர்வுக்கும் நமது தாழ்வுக்கும்
நாம்தான் காரணம் என்கிறார் வள்ளுவர்.

English couplet :

"Of greatness and of meanness too
the deeds of each touchstone true "

Explanation :

"A man's deeds are the touchstone of his
greatness  and littleness"

Transliteration :

"Perumaikkum Enaich cirumaikkum thaththam
Karaname kattalaik kal"



Comments

Popular Posts