அதிக மதிப்பெண் வேண்டுமா ...

    அதிக மதிப்பெண் வேண்டுமா...

தேர்வு என்றாலே மதிப்பெண்தான்.
ஆண்டு முழுவதும் உழைத்த உழைப்பின்
பலன் மதிப்பெண்மூலமாகதான் அறிய
வரும்.
மதிப்பெண் மட்டுமே ஒரு மாணவனின்
திறமையைத் தீர்மானிக்கும் கருவியாக
இல்லை என்று சும்மா வாய்ப்பேச்சுக்குச்
வேண்டுமானால்  சொல்லலாம்.
யாருமே வெறுமனே உனக்கு நல்ல அறிவு
இருக்கிறது. ஆதனால் மேல்படிப்பிற்குச்
சேர்த்துக் கொள்கிறேன் என்று
சேர்த்துக் கொள்ளப் போவதில்லை.
சும்மா பாஸ் மார்க்  வாங்கினால்
போதும் என்று  நம்மாலும் திருப்தி
அடைந்துவிட முடியாது.
அப்படியே ஒருவன் சொல்லிக் கொண்டு
திரிந்தால் அது படிக்க சோம்பல்பட்டு
சொல்லும் சொல்லாகத்தான் இருக்கும்.  
 
உங்களுக்கு மதிப்பெண் வேண்டும்தானே
அப்படியானால் தேர்வுக்கு முன்பு மூன்று
முக்கியமான விசயங்களை நீங்கள்
கண்டிப்பாக  மனதில் பதிய
வைத்துக் கொள்ள வேண்டும்.

1. தேர்வைப் பற்றிய நேர்மறை எண்ணம் வேண்டும்:

தேர்வு என்பது உங்கள்முன் வைக்கப்பட்டுள்ள 
மிகப் பெரிய சவால் என்ற எண்ணத்தை
அடியோடு மாற்ற வேண்டும்.
தேர்வு உங்கள் திறனை மெய்ப்பிக்க
கிடைத்த அரிய வாய்ப்பு என்பதைத் தவிர
வேறு ஒன்றுமில்லை.
ஓர் ஆண்டுகால உழைப்பிற்கான ஊதியத்தை
நிர்ணயம் செய்யும் கருவி.
உழைப்பிற்கு ஊதியம் வேண்டுமல்லவா!
அதுவும் கை நிறைய வேண்டுமல்லவா !
அப்படியானால் மதிப்பெண்களை அள்ளிவிட
வேண்டியதுதான்.
அதற்கான வழி என்ன...
தேர்வு களத்தில் நம்மை வெற்றியாளனாக
முன்னிலைப் படுத்துவதுதானே..
களத்தில் இறங்கி ஒரு கலக்கு
கலக்கிடுவோம்..நம்மால்  முடியாததா என்ன..
நன்றாக படித்திருக்கிறேன்.
நான் படித்த பாடங்களில் இருந்துதான்
கேள்விகள் வரும் என்ற தன்னம்பிக்கையோடு
தேர்வு எழுத செல்லுங்கள்.
உங்களால் முடியாதது ஒன்றும்
இல்லைங்க..
இப்போது நிம்மதியாக தேர்வு எழுத
புறப்படலாம் இல்லையா!

2. பதற்றப்படவே கூடாது :

தேர்வு என்றாலே சிலருக்கு
கை கால் எல்லாம் உதற ஆரம்பித்துவிடும்.
அடிக்கடி பாத் ரூம் உள்ளே போய் உட்கார்ந்து
கொள்வர் .வியர்த்து விறுவிறுக்கும்.
தலை சுற்றி விழுந்து விடுவதுபோல்
தோன்றும்.
மறுபடியும் மறுபடியும் தண்ணீரை
மடக்கு மடக்கு என்று குடிப்பர் .
இப்படி பதற்றப்பட்டால் படித்ததும்
மறந்து போய்விடும்.
வேண்டாம் வீண் பதற்றம்.
நீங்கள் நன்றாகதானே படித்திருக்கிறீர்கள்.
பிறகு எதற்கு பதற்றம்...
தேர்வு என்ன அவ்வளவு பயங்கரமான ஒன்றா?
இந்தச் சாதாரண தேர்வுக்குப் போய்
ஏன் இந்த பதற்றம்?
தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு
முன்பாகவே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு
அமைதியாக இருங்கள்.
அப்போதும் அந்த கேள்வி வந்துவிடுமோ
இந்தக் கேள்வி வந்து விடுமோ என்று
பதற்றப்பட்டு புத்தகங்களைப் புரட்டிக்
கொண்டு இருக்க வேண்டாம்.
இயல்பாக பேசுவதுபோல பேசுங்கள்.
அது படித்திருக்கிறாயா...
இது படித்திருக்கிறாயா என்று கேட்கும்
நண்பர்களிடமிருந்து விலகியே இருங்கள்.
அவர்களின் கேள்வி உங்களை மேலும்
பதற்றப்படுத்தும்.
தேர்வு அறைப்பக்கம் சென்றதும் சிரித்துக்
கொண்டே செல்ல வேண்டும்.
அறையினுள் சென்று உட்கார்ந்ததும்
நன்றாக ரிலாக்ஸ் ஆக மூச்சுவிடுங்கள்.
அது எல்லா பதற்றத்தையும் தணித்துவிடும்.

3   எழுதும் முறையில் கவனம் வேண்டும் :

எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது நாம்
எழுதும் முறைதான்.
தேர்வு எழுத நாம் எடுத்துக்கொள்ளும்
கரிசனம்தான் நமக்கு அதிக
மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.
திட்டமிடல் மிகமிக முக்கியமான ஒன்று.
தெளிவாக எழுத வேண்டும்.
அதை நேரத்தில் கவனமாகவும்
விரைவாகவும்ஸஎழுத வேண்டும் .
வினா எண்களை சரியாக
எழுதுதல் மிகமிக முக்கியமான ஒன்று.
தெரிந்த வினாக்களை முதலில்
வரிசையாக எழுதிக் கொண்டே வாருங்கள்.
இது வீணாக கால விரயம்
செய்வதைத் தவிர்க்கும்.
பாதி எழுதிவிட்டோம் மீதி எழுதத்
தெரியவில்லை. பதற்றப்பட வேண்டாம்.
மீதி பகுதியை எழுதுவதற்கு
இடம்விட்டுவிட்டு அடுத்த கேள்விக்கான
விடையை எழுத தொடங்கிவிட வேண்டியதுதான்.
ஞாபகம் வரும்போது எழுதிக் கொள்ளலாம்.
விடையில் முக்கியமான பகுதிகளை
அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்.
அது விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு
உங்கள்மீது  நல்அபிப்பிராயம் ஏற்பட
வைக்கும்.
அதுமட்டுமல்லாமல் நல்ல
மதிப்பெண்களையும் பெற்றுத் தரும்.
தெரியாத வினா இருந்தால் அப்படியே
விட்டுவிடக் கூடாது.
அவ்வினாவோடு தொடர்புடைய தெரிந்த
வினாவிலிருந்து ஓரிரு வரிகளாவது
எழுதி வைத்துவிட வேண்டும்.
அது குறைந்தது ஓரிரு
மதிப்பெண்களையாவது கூடுதலாக
பெற்றுத்தர உதவும்.எந்த விடையையும்
எழுதாமல் விட்டு வைத்தல் கூடாது
என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அறிவியல் பாடம் எழுதும்போது
மறக்காமல் குறியீடுகள் ,அளவுகள்
போன்றவற்றை எழுத வேண்டும்.
இப்படி ஒரு திட்டம் வகுத்து வைத்து தேர்வு
எழுதினால் நல்ல மதிப்பெண் பெறுவது
உறுதி.

4.கடைசி நேர பதற்றம் வேண்டாம் :

கடைசி மணி அடிப்பதற்கு முன்பாகவே
விடைத்தாளைக் கட்டி தயாராக வைக்க
வேண்டும்.கடைசி நேரத்தில்
கட்டும்போது பதற்றத்தில் தாள்களை மாற்றி
வைத்து கட்டுவதற்கு வாய்ப்பு
ஏற்பட்டுவிடும்.
கடைசி நேர பதற்றம் வேண்டாம்.
நிதானமாக கட்டி வைத்துவிட்டு பின்னர்
ஒருமுறை எல்லாவற்றையும் வாசித்து
சரி பாருங்கள்.
எழுத்துப்பிழை போன்றவை சரி செய்யப்பட
இது உதவியாக இருக்கும்.
நன்றாக எழுதி இருக்கிறோம் என்ற
தன்னம்பிக்கையோடு விடைத்தாளை
ஒப்படையுங்கள்.
கண்டிப்பாக அதிக மதிப்பெண்கள்
உங்களுக்குத்தான்.

         வாழ்த்துகள்
        
        

     

Comments

  1. தேர்வு எழுதுவோருக்கான அறிவுரைப் பதிவு மிக நன்று.

    ReplyDelete

Post a Comment

Popular Posts