செல்வத்துட் செல்வம்......

 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்.....

"செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
 செல்வத்து ளெல்லாந் தலை. "
                                              குறள். ,: 411

 செல்வத்துட் செல்வம் _ செல்வங்கள்
                                             எல்லாவற்றுள்ளும்
 செவிச்செல்வம் _ கேள்விச் செல்வம்
 அச்செல்வம் _ அந்தச் செல்வம்
 செல்வத்துள் _ செல்வங்கள் என்று 
                              கூறப்படுவனவற்றுள்
 எல்லாம் _  அனைத்திலும் 
 தலை _  முதன்மையானது.
     
ஒருவருக்கு சிறப்பான செல்வமானது செவியால்
வரும் செல்வமாகும்.அச்செல்வம்
பிற செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் 
முதன்மையான செல்வமாக
 கருதப்படுகிறது.

விளக்கம் :

 செவியால் கேட்டு நாம் பெறும் அறிவு 
 செவிச் செல்வம் எனப்படுகிறது.
 கேள்வி அறிவு செவிச்செல்வம்.
 ஏன் ,எதற்கு ,எப்படி என்று கேட்டுப்பெறும்
 அறிவு செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் 
 தலையாய செல்வமாகக் கருதப்படும்.
 
 கேள்வி கேட்டுப் பெறும் அறிவில் 
 ஒரு தெளிவு இருக்கும். 
 புரியாதவை யாவும் புரியும். 
 
 பிற செல்வங்கள் எல்லாம் இன்று
 வரும் நாளை போகும்
 நிலையாமை உடையது. 
    
  கேள்விச் செல்வம் மட்டுமே நிலையானது.
  நாள்தோறும் வளரக்கூடியது.
  
  எத்தனை பட்டங்கள் பெற்ற
  அறிவாளியாக இருப்பினும்
  நாலுபேரிடம் பழகி, கேட்டு பெறும் 
  அறிவாகிய  உலக அறிவு வேண்டும்.
  அதாவது அனுபவ அறிவு எனப்படும்
  பட்டறிவு வேண்டும்.
  பட்டு பட்டு நாம் பெறும் இந்த பட்டறிவு
  எப்படி கிடைத்தது?
  கேட்டலால் வந்ததுதான் இந்த பட்டறிவு.
  அக்கம்பக்கத்தில் கேட்டல், ஊடகங்கள்
  மூலமாக கேட்டல் பிரயாணத்தின்போது
  செவிகளுக்கு வந்து சேரும் செய்திகள்
  என்று நமக்கு அறிவைப் பெற பல 
  வாய்ப்புகள் உள்ளன. 
  இப்படி செவி் வழியாக வந்து 
  சேரும் அறிவு  மட்டுமே என்றுமே 
  முதன்மையான அறிவு
  என்கிறார் வள்ளுவர்.
    
  கற்றலினும் கேட்டல் நன்று 
    
   English couplet. :. 411

"  Wealth of wealth is wealth acquired be ear attent;
  Wealth mid all wealth supremely excellent"

  Explanation : 

 Wealth gained by the ear is wealth of wealth; 
 that wealth is the chief of all wealth.

 Transliteration : 

 " selvaththut selvanj sevichselvam achselvam
  selvaththu Lellaan thalai"
      
Comments

Popular Posts