வேலொடு நின்றான்....

          வேலொடு நின்றான்.....


"வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு "
                 குறள். :   552

வேலொடு _ (கையில்)ஆயுதத்தோடு
நின்றான்  _ நின்றவன்
இடு_ தா , கொடு
என்றது _ கேட்டல் ,வேண்டுதல்
போலும்  _ போன்றது
கோலொடு _ ஆட்சி அதிகாரத்தோடு
நின்றான் _  நிற்பவன் ,இருப்பவன்
இரவு  _ வேண்டுதல்

ஆட்சிக்குரிய கோலை ஏந்தி அரசாளும் 
மன்னன் குடிமக்களிடம் பொருள் கேட்பது
என்பது கையில் வேல் ஏந்தி வரும் கள்வன்
தா என்று பொருளைப் பிடுங்கிச்
செல்வதற்கு ஒப்பானதாகும்.

விளக்கம் : 
 
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மன்னன்
குடிமக்களைக் கட்டாயப்படுத்தி வரி வசூல்
செய்தல் கூடாது.
இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று
கட்டாயப்படுத்துதல் வழிப்பறி கொள்ளைக்குச்
சமமாகும்.
கொள்ளையன்தான் கையில் இருப்பதை எல்லாம்
கொடு என்று கத்தியையோ இல்லை பிற
ஆயதங்களையோ காட்டி மிரட்டுவான்.
அப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஒருபோதும்
ஆட்சியாளர்கள் குடிமக்களுக்குக் கொடுத்தல்
கூடாது.

ஆட்சியாளர்கள் கொள்ளையர்களாக
மாறிவிடக் கூடாது .
கையில் ஆயுதத்தை வைத்திருப்பவன்
பிச்சை கேட்க மாட்டான்.
பயமுறுத்தி கையில் இருப்பதைப்
பிடுங்கும் கொள்ளையனாகத்தான்
இருக்க முடியும்.
வரிக்கு அதிகமாக எந்த ஒரு பொருளையும்
அரசு மக்களிடம் வாங்குதல் கூடாது.
வேலோடு நின்ற கள்வனும்
கோலோடு நிற்கும் மன்னனும்
செயலில் ஒத்து இருப்பவர்கள் ஆவர்.
அதாவது மக்களை அச்சுறுத்தி வருவாய் 
தேடும் ஆட்சியாளரைக் கள்வர்
என்கிறார் வள்ளுவர்.

அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி
குடிமக்களிடம் வரி என்று அதிகமாக
வசூலிக்கும் மன்னனும் கள்வனைப்
போன்று தண்டிக்கப்படக் கூடியவனே.
முறையற்று பெறும் செல்வத்தை 'இரவு'
என்று குறிப்பிட்ட வள்ளுவர் கருத்தால் அது
'களவு 'என்கிறார் .

English couplet : 

"As  'give' the robber cries with lance uplift, so kings
With scripted hand implore a gift."

Explanation :

The request (for money )of him who holds the sceptre
is like the word of a highway robber who stands
With a weapon  in hand and says give up your
Wealth.

Transliteration:

"Velotu nindraan ituven Rodhupolum 
Kolodu nindraan iravu"Comments

Popular Posts