உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்....

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்....

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் "
                     குறள்            :          1033

உழுது _ உழவுத்தொழில் செய்து
உண்டு _ உணவு உண்டு
வாழ்வாரே _ வாழ்கின்றவரே
வாழ்வர் _ வாழ்பவராவார்
மற்றெல்லாம் _ மற்ற அனைவரும்
தொழுது _ வணங்கி
உண்டு _ உணவு உண்டு
பின் செல்பவர் _ பின்னால் செல்பவராவர்

யாவரும் உண்ணுவதற்கு உணவு தந்து
தாமும் உண்டு வாழ்வதற்காக உழவுத்தொழில் 
செய்து வாழ்பவரே வாழ்பவராகக்
கருதப்படுவார்.
மற்றவர் அனைவரும் அவர் தருவதை உண்டு
அவர் பின்னால் செல்பவரே ஆவார்.

விளக்கம் : 

உழவுத்தொழில் செய்து அதனால் வரும்
உணவு தானியங்கள் போன்றவற்றை
உண்டு வாழும் விவசாய பெருங்குடி
மக்கள் மட்டுமே வாழ்ந்தவராகக்
கருதப்படுவர்.

ஏனெனில்  அவர் தம் சுய உழைப்பின்
மூலம் பெற்ற உணவை உண்பவர்.
தன் உழைப்பில் கிடைக்கும் உணவை
உண்பவர் மட்டுமே உண்டவர்
என்னும் பெருமைக்கு உரியவர்.

மற்றவர் எல்லாம் உழவன் உழைப்பில்
கிடைத்த உணவை உண்டு
உயிர் வளர்ப்பவர்.
அவர்களால் சுயமாக உணவு
உற்பத்தி செய்ய முடியாது.
தமக்கு உணவு வேண்டும் என்றால்
யாரையாவது சார்ந்துதான்
வாழ வேண்டும்.
வயிறு பசிக்கிறதா... உணவு  வேண்டும்.

உணவு வேண்டுமா....அப்படியானால்
உழவுத்தொழில் செய்பவரை 
நாடித்தானே ஆக வேண்டும்.

பதவியோ பணமோ உணவை உற்பத்தி
செய்யாது. ஆனால் அனைவருக்கும்
 கண்டிப்பாக உயிர்வாழ உணவு
 அவசியமாக உள்ளது.
அதனால்தான் உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோர் எனப்படுகிறார்.
எண்சாண் உடம்பில் ஒருசாண்
வயிறே பிரதானம்.
அந்த வயிற்றை நிரப்பதான்
இத்தனை பாடுகளும்
ஓட்டங்களும்.
ஆகவே நமக்கு உணவளிக்கும்
உழவனே அனைவரிலும்
முதன்மையானவன்.

ஆதலால் அந்த உணவை நமக்குத் தரும்
உழவன் பின்னால்  சென்று
வாழ்பவராகவே மற்ற அனைவருமே
கருதப்படுவர் என்கிறார் திருவள்ளுவர்.

English couplet : 

"Who ploughing eat their food , they truly live
 The rest to others bend subservient ,eating
 what they give "

Explanation :. 

They alone live who live by agriculture;all others
Leading a cringing dependent life .

Transliteration :

"uzhudhuNdu vaazhvaarae vaazhvaarmaR  Rellaam
thozhudhuNdu pondra pagar "

Comments

Popular Posts