ஆசிரியர் நாள் வாழ்த்து

              ஆசிரியர் நாள் வாழ்த்து

 முதலெழுத்தைச் சொல்லித் தர
 முதன்முதலாய் எம் கரம்பற்றி
  முன்னங்கைத் தொட்டழுத்தி
 முத்தான கையெழுத்தை
 முன்னறிமுகம் செய்து வைத்து
 முத்தாய்ப்பாய்ப் பேசிவிட
 முனைந்து பல பயிற்சி தந்து
 முன்னிலவு  உருவம் காட்டி
 முழு உலகையும் காட்சியாக்கி
 முன்பின் நிகழ்வுரைத்து
 முன்னேற்றப்பாதை வகுத்தளித்து
 முன்னணியில் யாம் நிற்றல் கண்டு
 முகமெல்லாம் பூரிப்பால் மலர்ந்து
 முட்டிநிற்கும் வானம் எட்டும்வரை
 முதற்படியில் நின்று அண்ணாந்து பார்த்து
 முழுமனதாய் எம்மை வாழ்த்தி நிற்கும்
 முதல்நிலை ஆசிரிய பெருமக்களுக்கு
 முதல் வகுப்பு மாணவியின் வணக்கமும் வாழ்த்தும்!
 


Comments

Popular Posts