பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்....
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்....
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும் "
குறள் : 319
பிறர்க்கு _ அடுத்தவர்களுக்கு
இன்னா _ துன்பம், கெடுதல்
முற்பகல் _ முன் ஒரு பொழுது, முன்பு
செய்யின் _ செய்தால்
தமக்கு _ தங்களுக்கு
இன்னா _ தீமை
பிற்பகல் _ பின் ஒரு பொழுது , பின்னர்
தாமே _ தாமாகவே
வரும் _ வந்து சேரும் , வந்தடையும்
ஒருவர் ஒரு பொழுது பிறர்க்கு துன்பம் செய்தால்
அவர்க்கு மறுபொழுது துன்பம்
தாமாகவே வந்து சேரும்.
விளக்கம் :
ஒருவர்க்கு முன்பு ஒரு பொழுது
ஒரு தீங்கு விளைவித்திருப்போம்.
அது காலையிலாக இருக்கலாம்.
நேற்றாக இருக்கலாம்.
கடந்த மாதமாக இருக்கலாம்.
கடந்த ஆண்டாகக்கூட இருக்கலாம்.
அல்லது முன்பு ஏதாவது ஒரு
காலகட்டத்தில் இது நிகழ்ந்திருக்கலாம்.
நாம் தீங்கு செய்தது என்னவோ
உண்மையாக இருக்குமானால்
அப்படிப்பட்டதான தீங்கு உங்களை
நோக்கித் திரும்பி வந்து
தாக்குதல் என்னவோ உறுதி.
யாரும் ஒருவருக்குக் கெடுதல்
செய்துவிட்டோம் என்று நிம்மதி
பெருமூச்சு விட்டுவிட்டு மகிழ்ச்சியாக
இருந்துவிட முடியாது.
செய்தவினைக்கு எதிர்வினை
வந்தே தீரும் என்கிறார் வள்ளுவர்.
English couplet :
"If,ere the noontide ,you to others evil do,
Before the eventide will evil visit you "
Explanation :
If a man inflict sorrow upon others in the morning,
It will come upon him unsought in the very evening.
Transliteration :
"Pirarkkinnaa murpakal seyyin thamakkinnaa
pirpakal thaame varum "
Comments
Post a Comment