பண்புடையார் பட்டுண்டு உலகம்....

  பண்புடையார் பட்டுண்டு உலகம்....

" பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன் "
                      குறள்  :  996


பண்புடையார்  _  நற்பண்பு கொண்டவர்கள்
பட்டுண்டு _   இருந்து வருவதால்
உலகம் _ இந்த உலகமானது நிலைபெற்று வருகிறது
அதுஇன்றேல் _ நற்பண்பு உடையவர்கள் இல்லை என்றால்
மண்புக்கு _ மண்ணிலே புதைந்து
மாய்வது _ அழிந்து போய்விடும்
மன் _ அசைச் சொல்


பண்புடைவர்கள் வாழ்வதால்தான் இவ்வுலகம்
 சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது.
நற்பண்புள்ளவர்கள் இல்லாது
போய்விட்டால் இந்த  உலகு மண்ணுக்குள் 
புதைந்து மறைந்துவிடும்.

நற்பண்பு உள்ள மக்கள் இன்றும்
இவ்வுலகில் இருந்து வருகிறார்கள்.
அவர்களால்தான் இவ்வுலகம் இன்றுவரை
அழிந்து போகாமல் நிலையாக 
இயங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படி நற்பண்புள்ளவர்கள் இல்லாது 
போயிருந்தால் இவ்வுலகம் என்றோ 
மண்ணோடு மண்ணாகப் போயிருக்கும்.
உலகம் நிலையாக இயங்கிக்
 கொண்டிருக்க வேண்டுமானால் 
 நாட்டில் நல்லவர்கள் இருக்க வேண்டும்.

"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை "
என்ற ஔவையின் மூதுரை பாடலும்
ஈண்டு நோக்கத்தக்கது.
நல்லவர் ஒருவர் இருந்தால்கூட போதும்.
நாட்டில் நல்ல மழை பெய்யும்
என்கிறார் ஔவை.

மொத்தத்தில் நல்லவர்கள் இருந்தால் மட்டுமே
நாடு நல்லபடியாக இயங்கிக்
கொண்டிருக்கும் என்பது பாடலின் கருத்து.

English couplet : 

" The world abides for 'worthy' men its weight sustain
 Were it not, 'twould fall to dust again"

Explanation:. 

The way of the world subsists by conduct with the good; 
If not ,it would bury itself in the earth and perish.

Transliteration : 

"paNpudaiyaar pattuNdu ulagam adhuindrael
maNpukku maaivadu man "

Comments

Popular Posts