யான்நோக்குங்காலை நிலன்நோக்கும்...

        யான்நோக்குங் காலைநிலன் நோக்கும்....



"யான்நோக்குங் காலைநிலன் நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்  "
                         குறள்  : 1094
                      

                         
யான்  _  நான்
நோக்குங்காலை  _  பார்க்கும் பொழுது
நிலன் நோக்கும் _ நிலத்தைப் பார்க்கும்
நோக்காக்கால்  _  பார்க்காதபோது
தான்  நோக்கி _ தலைவனைப் பார்த்து
மெல்ல நகும் _  மெதுவாக புன்னகைக்கும்

நான் பார்க்கும்போது பாராததுபோல நிலத்தைப்
பார்ப்பாள்.நான் பார்க்காதபோது மெதுவாக
என்னைப் பார்த்து புன்முறுவல் கொள்வாள்.

விளக்கம் :

தலைவன் பார்க்கும்போது தலைவி
பார்க்க மாட்டாளாம்.பார்க்காததுபோல
வெட்கத்தால் நிலத்தைப் பார்த்துக்
கொண்டிருப்பாளாம்.
தலைவன் அந்தப் பக்கம் திரும்பியதுதான்
தாமதம் தலைவனைப் பார்த்து
மெதுவாக தனக்குள்ளே புன்னகைத்துக்
கொள்வாளாம்.

அப்படி சிரிக்கும்போது
பெண்ணுக்கே இயல்பாக வருமே
ஒரு நாணம்
அது வந்து ஒட்டிக் கொள்ள,
காலால் நிலத்தில்
கோலம் போட்டு நிற்பாளாம்.

அந்த சிரிப்பை வள்ளுவர் மெல்ல நகும்
எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.
"மெல்ல நகும்" .
எவ்வளவு அருமையான
சொற்கள் பாருங்கள் !

  மெல்ல நகும் என்று சொல்லும்போதே
  அந்தப் புன்முறுவலோடு
அந்தப் பெண்ணும் கூடவே நாணத்தோடு
நம் கண்முன்
வந்து நிற்பது போன்ற உணர்வு
ஏற்படுகிறதல்லவா!

நான் பார்க்கும்போது
பார்க்காததுபோல தலையைக்
கவிழ்ந்து கொள்வாள்.
நான் பார்க்காதபோது அப்படியே
மெதுவாக ஓரக்கண்ணால்  என்னைப்
பார்த்து புன்னகைத்துக் கொள்வாள்.
அவள்தான்  என் காதலி
என்று காதலனே கூறுவதுபோல

பாடல் அமைத்துள்ளது காட்சிக்கு
இன்னும் வலு சேர்க்கிறது.

எவ்வளவு அருமையான காதல் காட்சியைப்
படமாக்கித் தந்திருக்கிறார் பாருங்கள் !

English couplet :

"I look on her, her eyes are on the ground the while ,I look away,
She looks on me with timid smile "

Explanation :

When I look she looks down, when I do not,
She looks and smiles gently.

Transliteration. :

"Yaanokkum kaalai nilaannokkum nokkaakkaal
thaannokki mella enakum "

Comments

Popular Posts