அன்பகத் தில்லான் உயிர் வாழ்க்கை....
அன்பகத் தில்லான் உயிர்வாழ்க்கை
"அன்பகத் தில்லான் உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த் தற்று "
குறள். : 78
அன்பகத்தில்லான் _ உள்ளத்தில் அன்பு இல்லாதவன்
உயிர்வாழ்க்கை _ உயிர் வாழ்தலாவது
வன்பாற்கண் _ கொடிய பாலை நிலத்தில்
வற்றல் மரம் _ பட்ட மரம்
துளிர்த் தற்று _ துளிர்த்தது போன்றது
உள்ளத்தில் அன்பில்லாமல் வாழும் வாழ்க்கையானது வளமில்லாத கொடிய பாலை நிலத்தில் பட்டமரம்
துளிர்விடுவது போன்றதாகும்.
விளக்கம் :
உள்ளத்தில் உண்மையான அன்பு இல்லாத
ஒரு வாழ்க்கை வாழ்க்கையே அல்ல.
அந்த வாழ்க்கை வாழ்ந்தும் வாழாதது
போன்றதே ஆகும்.
கொடிய பாலைநிலத்தில் பட்டுப் போன ஒரு
மரமானது மறுபடியும் துளிர்விட
வாய்ப்பே கிடையாது.
அதுபோன்றதுதான்அன்பில்லாதவர்களில்
குடும்ப வாழ்க்கையும் இருக்கும்.
மரம் பட்டுப்போனால் பட்டது பட்டதுதான்.
திரும்ப துளிர்ப்பதற்கு வாய்ப்பே கிடையாது
என்பது பாலை நிலத்து மரத்துக்கு
எப்படிப் பொருந்துமோ அப்படித்தான்
அன்பு வற்றிப்போனவர்களின் வாழ்க்கையும்
மறுபடி துளிர்விட்டு வசந்தகாலமாக மாறும்
என்று எதிர்பார்க்க முடியாது.
அன்பு வற்றிப் போனால் குடும்ப
வாழ்க்கை பட்டமரமாகிப் போகும்
என்கிறார் வள்ளுவர்.
English couplet :
" The loveless soul the very joys of life may know ,when flowers in
barren soil ,on sapless trees shall blow "
Explanation :
The domestic state of man whose mind is without love
is like the flouring of a withered tree upon the parched
desert.
Transliteration :
" Anpakath Thillaa Uyirvaazhkkai Vanpaarkan
Vatral Marandha pottu Thattu "
Comments
Post a Comment