தாய்
தாய்
தாய்...தாய்...புஷ்பத்தாய் அக்கா _ நீ
எனக்குத் தாய்
ஆட்டுப்பாலூட்டி ஆராரோ பாடி
ஆசையாய் தலைவாறி
ஆடை அலங்காரம்பண்ணி
ஆரம்பப்பள்ளி அனுப்பிய அக்கா_ நீ
எனக்குத் தாய்!
அன்பாய்ச் சுமந்தாய்
அடித்தாய்க் கடிந்தாய்
அணைபோட்டு எம்மை
அரணாய் காத்து வளர்த்த அக்கா _ நீ
எனக்குத் தாய்!
வளர்த்தாய் உவந்தாய்
வளர்சிறு பிராயத்தில்
வந்த அத்தான் கரம்பிடித்து
வழிந்தோடும் நீரோடு சென்ற அக்கா _ நீ
எனக்குத் தாய்!
அக்கா உன் அன்பனைத்தும்
அழிக்க வொண்ணா
அருஞ்சிலை எழுத்தாக்கி
அடிமனதில் பதிந்து நிற்கும் அக்கா _ நீ
எனக்குத் தாய் !
அந்நியம் அறியா அன்பான
அத்தானோடு ஆண்டாண்டு காலம்
அணையாய் இணையாய்
ஆண்டவன் அருளால் வாழும் அக்கா _ நீ
எனக்குத் தாய்!
வானும் நிலனும் போல
வாழ்வாங்கு வாழ்வாய்
பல்லாண்டு..பல்லாண்டு
பல்லாயிரம் ஆண்டு நலமாய் அக்கா _ நீ
எனக்குத் தாய்!
தாய்...தாய்...புஷ்பத்தாய் அக்கா _ நீ
எனக்குத் தாய் !
Thank you very much Chitti for published the articles about your Akka and Athan
ReplyDelete