கொரோனா ஓட்டம்...
கொரோனா ஓட்டம்
சமீப நாட்களாக நம்மை தூங்கவிடாமல்
துரத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடுமையான
சொல் எது ? என்று கேட்டால்
கொரோனாவைத் தவிர வேறு
எந்தப் பதிலும் இருக்க முடியாது.
பத்திரிகையைத் திறந்தால்
கொரோனா கட்டுரை...
கொரோனா டேட்டா...
கொரானா மருந்து...
கொரோனா ஜோக்...
இப்படி பக்கத்திற்குப் பக்கம்
கொரோனா.
தொலைக்காட்சி பெட்டியைப் பார்த்தால்
கொரானாவுக்கு எதிரான விளம்பரம்
ஒரு பக்கம்.
கொரோனா வியாபாரம்
மறுப்பக்கம்.
கொரோனா விவாதங்கள்
இன்னொரு பக்கம்...
சரி இதெல்லாம் வேண்டாம்
என்று கைபேசியை எடுத்தால்
காது கிழியும்வரை கொரோனா
பாதுகாப்பு விளம்பரம்....
ஐயோ...ஆளை விடுங்கடா சாமி
என்று வெளியில் எட்டிப்பார்த்தால்
அங்கங்கே கொரோனாவை நினைவூட்டுதல்போல
முகமூடி மனிதர்கள்....
கொரோனா உண்டா இல்லையா
என்ற குழப்பத்தில் இருக்கும்போது
நமக்கு அருமையானவர்கள்,
நன்கு பரிச்சயமானவர்கள்
பாதிக்கப்படும்போது நம்பித்தான்
ஆக வேண்டும் என்று மனம்
அடம் பிடிக்கும்.
எது எப்படியோ ...எங்கும் கொரோனா...
எதிலும் கொரோனா....
என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.
எதைப் பற்றியும் அச்சப்படாமல்
வாழ்ந்துவந்த நமக்குள் ஒரு அச்சத்தை
விதைத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது
கொரோனா....
விதைத்தவர் யார்...?
வளர்த்தவர் யார்....?
என்று பேசிக் கெண்டிருப்பதில்
எந்த பயனும் இருக்கப் போவதில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ
நாம் மட்டும்தான் என்பது மட்டும்
நிதர்சனமான உண்மை.
நாம் ஏதோ ஒரு வலைக்குள்
சிக்கிவிட்டோம்...
இதிலிருந்து நம்மை விடுவிப்பார் யார்...
என்ற கேள்வி அனைவர் மனதிலும்
உண்டு.
பலருடைய கண்களில் யாரிடமிருந்தாவது
உதவி கிடைக்காதா என்ற ஏக்கத்தைக்
காணமுடிகிறது...
அடுத்தவர்களை எதிர்பார்த்து
காத்திருந்தால் இதிலிருந்து நாம்
வெளிவரவே முடியாது. இந்த
உண்மையை மட்டும்
மனதில் பதிய வைத்துக் கொள்ள
வேண்டும்.
நம் பலத்தால் வலையைக் கடித்து
உதறி வந்தாலொழிய இதிலிருந்து
விடுபட வேறுவழியே இல்லை.
சிக்கனம்...சுயபாதுகாப்பு
சுயவேலை என்று நமக்குள்
ஒரு ஸ்கெச் போட்டு வைத்தால்
மட்டுமே நம்மால் கொஞ்ச தூரமாவது
இந்தக் கொரோனா ஓட்டத்தில் ஓடமுடியும்.
அல்லது வாங்க பழகலாம் என்று
கொரோனாவோடு பழகிக்க
சொல்கிறார்களே என்று பழகிக்கப்
போனால் பேராபத்து வருவதென்னவோ
நிச்சயம்.
நாம்...நமக்கு...என்...என்னை...என்று
மனிதனை சுயநலவாதிகளாக
வாழும் நிலைக்குத் தள்ளியுள்ளது கொரோனா.
நமக்கு நாமே என்ற நிலையில்தான்
அனைவரும் இருக்கிறோம்.
இதுவரை ஏழைகளுக்குச் சிறுசிறு
உதவிகள் செய்தவர்கள்கூட
கையைச் சுருக்கிக் கொண்டார்கள்.
காரணம் நாளைக்கு என்ன ஆகுமோ
என்று அனைவருமே ஒரு நம்பிக்கை
இல்லா நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.
மூன்று நாட்கள் ....முப்பது நாட்கள்...
மூன்றுமாதம்....என்று ஊரடங்கு
முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
இதற்கான முடிவு தெரியாநிலை...
நாளைக்கு வேலை இருக்குமோ இருக்காதோ....
தனியார் அமைப்புகளில் வேலை பார்ப்பவர்கள்
மத்தியில் ஒரு கலக்கம்...
பிள்ளைகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டால்
நமக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடுமோ என்று
முதியவர்கள் முகங்களில் ஒரு கவலை.....
தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே அடைபட்டுப்
போனதால் மனநல பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட
குடும்பங்கள்..
ஓடியாடும் பருவத்தில் சிறகு ஒடிக்கப்பட்டு
கூண்டில் அடைபட்ட பறவைகளாக குழந்தைகள்....
பொருளாதார நெருக்கடியிலிருந்து
எப்படி மீள்வது எனப் புரியாமல்
குழப்பத்தில் இருக்கும் தொழில் முனைவோர்...
அப்பப்பா... இவர்கள் எல்லோருக்குமான பிரச்சனை
களிலிருந்து விடுதலை எப்போது....?
புரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது உலகம்.
மீள்வது எப்போது...?
யாருக்குமே விடை தெரியாத கேள்வி..
ஒரு போராட்டமான மனநிலைக்குத் தள்ளப்பட்டு
விட்டோம்.
ஒரு போராட்ட களத்தில் நிற்கும் வீரன்
சந்திக்கும் அத்தனை
நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டிய
சூழ்நிலை....
எதிரியின் கையில் பிடிபட்ட வீரனைப்போல
கொரோனா கையில் மாட்டிக்கொண்டு
திணறுகிறோம்....
விடுவித்துவிடுமா கொரோனா ?
விடுதலை எப்போது?...
விடுதலை நாளுக்காக காத்திருக்கின்றன விழிகள்....
Nice post!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVery nice. Congratulations.
ReplyDeleteஇன்றைய உண்மை நிலைமை இதுதான் என்பதை அற்புதமாக பதிவிட்டது மிக அருமை.
ReplyDeleteArumaiyana pathivu.
ReplyDeleteNice typing all point are very nice
ReplyDelete