புதுக் கவிதை
புதுக் கவிதை
தத்துக் குழந்தை
1. முட்புதருக்குள் குழந்தை
தாய்ப்பால் கொடுக்க மறுத்தவள்
கள்ளிப்பால் குடிக்கட்டும் என்று
தத்துக் கொடுத்து விட்டாளாம்!
தாய்
2. அத்துமீறிய செயலால்
பெத்துத் தொலைத்த ஜீவனை
செத்துத் தொலையட்டும் என்று
கத்தும் கடலோரம் மொத்தென்று
மெத்தனமாய் போட்டவளை
ம்மா... என்றுஅழைத்தது
குழந்தை!
செல்போன்
3. மருத்துவமனை முன் போராட்டம்
செல்போன் பார்த்து
ஆயா மருத்துவம் பார்த்ததால்
தாயும் சேயும் மரணமாம்
இதற்குத் தான்
செல்போன் பார்க்காதே... பார்க்காதே
என்று அம்மா
தலையில் அடித்துக் கொண்டாரோ!
புலி
4. ஊருக்குள் புலி நடமாட்டமாம்
காட்டைக் கண்டுபிடித்துத் தரும்படி
நாட்டாமையிடம்
பிராது கொடுக்க
வந்திருக்குமோ!
தட்டிப்பறிப்பு
5. குடியிருப்புக்குள் குரங்குகள்
இருப்பதையும்
தட்டிப் பறித்து விடுமோ
அச்சத்தில்
குழந்தைகள்!
தவித்த வாய்
6 காடெங்கும் தண்ணீர்
" கண்ட கண்ட தண்ணீரையும்
குடிக்காதே"என்றார் அம்மா
தாய் சொல் தட்டக்கூடாது
தாகத்தோடு
திரும்பியது காகம் !
துண்டு
7. பட்ஜெட்டில் துண்டு விழுகிறதாம்
ஈடுகட்ட
உழவனின்
இடைக் கச்சையானது
துண்டு!
குடை
8 பால்கனியில்
எட்டிப் பார்த்தது செடி!
வாடிவிடக் கூடாது என்று
குடைபிடித்தது
கட்டிடம்|
9. சம்பளம்
மானம் காக்கும்
மறு அவதாரம்
மாத வண்டியை நகர்த்தும்
மகத்தான சக்தி
பிரித்துக்கொடுக்க சொல்லும்
பொதுவுடடைமைவாதி
பசிப்பிணி போக்கும்
அட்சய பாத்திரம்
Comments
Post a Comment