ஆனமுதலில் அதிகம் செலவானால்.....

   ஆனமுதலில் அதிகம் செலவானால்......


ஔவையார் எழுதிய நல்வழிஎன்னும் நூல்
 நாற்பத்து ஒரு பாடல்கள் கொண்டது.
 வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் நூல்
 ஆதலால் நல்வழி என்ற பெயர் பெற்றது.

நாற்பது பாடல்களுமே நல்ல கருத்துக்களைக்

கொண்டவை.அவற்றுள் நான் அதிகம்

படித்து இன்புற்றப் பாடல்கள் நிறைய உண்டு.

நான்கு பாடல்கள் மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.

படித்து மகிழுங்கள்.


  ஆன முதலில் அதிகம் செலவானால்
  மானம் அழிந்து மதிகெட்டுப் _ போனதிசை
  எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
   நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

வருவாயைவிட அதிகம் செலவு செய்யாதே.
அப்படி செலவு செய்தால் மானம் இழந்து பிறனிடம்
கடன்  வாங்க கைநீட்டி நிற்கும் நிலை ஏற்படும் .
அறிவு மழுங்கிப் போகும்.

ஏதோ நம்மிடம் இருப்பதைப் பிடுங்க

வந்துவிட்டான் என்று எண்ணி,
திருடனைக் கண்டு விலகி ஓடுவதுபோல
அனைவரும்  உன்னைக் கண்டு விலகி ஓடுவர்.
ஏழேழு பிறப்புக்கும் தீயவனாகவே
நடத்தப்படுவாய்்.
நல்லவர்க்குகூட நாம் பொல்லாதவனாகத்தான்
தெரியும்.
ஆதலால் ஒரு போதும் வருவாய்க்கு
அதிகமாகச் செலவு செய்யக் கூடாது.

எவ்வளவு அருமையான உளவியல்

கருத்து பாருங்கள்!


ஆற்றின் போக்கில் மேடு் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் _ சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து

ஆறு வரும் வழி எங்கும் மேடும் பள்ளமும்
நிறைந்திருக்கும்.
அதுபோல்தான் செல்வமும் .

உயர்வும் தாழ்வும் என்று மாறி மாறி
தந்து நிற்கும்.
 வாழும் நாட்களில்  இந்த உண்மை அறிந்து
 செயல்பட வேண்டும்.

செல்வம் தண்ணீரைப் போல உருண்டு

ஓடிக்கொண்டே இருக்கும்.

பசி என்று வருபவருக்கு இல்லை என்னாது
அன்னம் இடுங்கள்.
 தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுத்து
  அவர்கள் தாகத்தைத் தணியுங்கள்.
ஒருவர் செய்யும் தர்மம்தான் அவரைக் காக்க வல்லது.
 அதுவே உங்கள் வாழ்நாள் உயர்வதற்கான
  உபாயமாக இருக்கும்.

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது _ நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
 வேருக்கு நெக்கு விடும்.

பெரிய யானை மீது அம்பு பாய்ந்தால்  அது அந்த
யானையைக் கொன்றுவிடும்.அதே அம்பு ஒரு பஞ்சு மூட்டையின்மீது பாய்ந்தால்
அது மூட்டையைத் துளைத்துக் கொண்டு
வெளியே வந்துவிடும்.
பஞ்சுக்கு அம்பினால் எந்தசேதமும்
ஏற்படாது.
கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பாறையானது
சிறிய செடியின் வேர்   ஊடுருவிச் செல்வதால்கூட
உடைந்து போக நேரிடலாம்.அதுபோல
கடுமையான சொற்களால் ஒரு காரியத்தையும்
சாதிக்க முடியாது.
மென்மையான சொற்கள் கடினமான இதயத்தையும்
கசிய வைக்கும் தன்மை கொண்டது.
இனிமையால் கடுமையான செயல்களையும்
வெற்றி கொள்ள முடியும்.

இனிமையான பேச்சு கடினமான

இதயத்தையும் நொறுக்க வல்லது...

உண்மைதாங்க...


நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் _ ஒண்டொடீ
பொதந் தனங் கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.

நண்டு, முத்துச்சிப்பி மூங்கில், 

வாழை ஆகியவை தாம் அழியும் 

காலத்தில்தான் கன்று ஈனுமாம்.
கன்று வந்ததுமே அது அழிவதற்கான

 காலம் நெருங்கி விட்டது என்பதை 

நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதுபோல ஒருவன் பெற்ற கல்வி , 

பதவி , பண்பு , பெயர்,
புகழ் , செல்வம் ஆகியவை

 அழியும் காலம் வந்துவிட்டது
என்பதை அவன் பிறன் மனைவியைப் பார்க்கத்
தொடங்கியதில் இருந்து நாம் தெரிந்து
கொள்ளலாம்.

ஆதலால் ஒருவனுக்கு அழியும் காலம்
வந்துவிட்டது என்பதை அவன் மனம் தடுமாற்றம்
கொண்டு பிற பெண்களைப் பார்க்கத்
தொடங்கியதுமே நாம் தெரிந்து கொள்ளலாமாம்.


"கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் _ இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல் "

கல்வி கல்லாதவனாகவே இருந்தாலும் ஒருவனிடம்
மிகுதியாக செல்வம் இருக்குமானால்
அவனை எல்லாரும் எதிர்கொண்டு சென்று
வரவேற்று உபசரிப்பர்.
கையில் பொருள் இல்லாது ஏழையாகிப் போனால்
ஒருவனை அவன் மனைவிகூட விரும்பமாட்டாள்.

அவன் தாய்கூட வெறுத்துவிடுவாள்.
அவன் வாய்ச்சொல் எந்த இடத்திலும்
செல்லுபடி ஆகாது.

எளியவன் சொல் அம்பலம் ஏறாது...

பணம் பத்தும் செய்யும் என்பார்கள்.

இங்கு அதற்கு ஒருபடிமேலே போய்

பதினோராவதாக தாயும் வெறுக்குபடியான

நிலைக்குத் தள்ளிவிடும் என்பது ஒரு

நெருடலான உண்மை !


Comments

  1. ஔவையார் பாடலும் அதற்கு தந்த விளக்கமும் வாழ்க்கை தத்துவத்தையே கூறிவிட்டது. மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts