நீதி சொல்லும் சேதி


        அளவோடு பேசு


"சொற்களின் மிகுதியில் 
பாவமில்லாமல் போகாது.
தன் உதடுகளை அடக்குகிறவனோ
புத்திமான்"
                               நீதிமொழிகள்    10  :19

"சோம்பற் கையால் வேலை 
செய்கிறவன் ஏழையாவான்.
சுறுசுறுப்புள்ளவன் கையோ 
செல்வத்தை உண்டாக்கும்"
                                        
"ஒருசொல் வெல்லும் ;ஒரு சொல் கொல்லும்."
தேவையில்லாமல் பேசக்கூடாது.

பேசினால் ஏதாவது வம்புதான் வந்து சேரும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
சிலர்   லொட லொடவென்று பேசிக் 
கொண்டே இருப்பார்கள்.
எப்போது பேச்சை முடிப்பார்கள் என்று
எரிச்சல் வந்துவிடும்.
           
 அமெரிக்க அதிபராக இருந்த   
 ஆபிரகாம் லிங்கன் நல்ல பேச்சாளர்.
ஆனால் அவர் பதவிக்கு வந்த பின்னர் 
அதிகம் பேசுவதைத் தவிர்த்தார்.

தேர்தல் காலத்தில் மக்கள் விரும்பும் 
அளவுக்கு சுவாரசியமாக பேசிய 
நீங்கள் தற்போது அதிகம் பேசுவதில்லையே 
ஏன் என்று  நிருபர்கள் கேட்டனர்.
அதிகம்  உளராமல் இருப்பதனாலேயே
 சர்ச்சைகளில் மாட்டாமல் இருக்க முடிகிறது. 
முடிந்தால் நீங்களும் இதனையே 
கடைபிடியுங்கள் என்று அறிவுரை
 கூறினாராம் லிங்கன்.
 
 சொற்களின் மிகுதியால் பாவமில்லாமல் 
 போகாது.   கர்த்தாவே என் வாய்க்கு 
 காவல் வையும்.
 என் உதடுகளின் வாசலைக் காத்துக் 
 கொள்ளும் என்கிறார் தாவீது ராஜா.
 
அதிக சொற்கள் அவதியைக் கொடுக்கும்.
அளவான பேச்சு அவமானங்களைத் தடுக்கும்.
நாம் பேசுவது விதைப்பதற்குச் சமம்.
கேட்பதோ அறுவடைக்குச் சமம்.
மனுஷன் தன் வாயின் பலனால் 
நன்மையைப் புசிப்பான்.
தன் வாயைக் காக்கிறவன் தன் 
பிராணனைக் காக்கிறான்.

ஆண்டவரே! என் உதடுகளுக்கு
காவல் வையும் என்ற வேண்டுதலோடு
இந்த நாளைத் தொடங்குவோம்.

           

                                   

Comments

Popular Posts