ஊரடங்கு
ஊரடங்கு
எண்சாண் உடம்புக்குச்
சிரசே பிரதானம்
இல்லை இல்லை
உணவே பிரதானம்
வரலாற்றுப்பிழை ஒன்றை
சாசனமாய் எழுதியே
வந்தது ஊரடங்கு !
ஒருவேளை கஞ்சிக்கே
உடம்பொடிய வேலை செய்து
ஆழாக்கு அரிசிதனைச்
சோறாக்கி ஆறுபேரும்
அரைவயிறு நிரப்புவதை
அடித்து கவிழ்க்க
வந்தது ஊரடங்கு !
ரேசன் கடைகள்முன்
கால் கடுக்க
காக்க வைத்து
கூனிக்குறுகி எம்மை
கும்பிடு போட வைத்து
மூடி முகம் மறைத்து
யாசகராய் வேடம் போட
வந்தது ஊரடங்கு!
மூன்றுமுறை முறையாய்த்
தின்றிருந்த வயிறு
நாழொரு முறையாவது
தாவென்று தாவா நடத்திட
கடையடைப்பு காத்திரு என்று
தடை போட முடியாமல்
தவிக்க வைத்து
வந்தது ஊரடங்கு!
உத்தரவு வரும்வரை
உள்ளுக்குள் அடங்கி
அடக்கி வாசியென
அடிக்கடி அடக்கியதால்
எகிறிய வயிறும்
உரத்த குரலில்
உள்ளுக்குள்ளேயே
ஒப்பாரி வைக்க
வந்தது ஊரடங்கு!
Comments
Post a Comment