தூய்மை என்றும்....
தூய்மை என்றும்......
மெட்டு: (ஒருதாய் மக்கள் நாம் என்போம்...)
தூய்மை என்றும் பேணிடுவோம்
தொடாமல் விலகி இருந்திடுவோம்
சுத்தம் ஒன்றே மருந்தென்போம்
தொடாது வாதை சொல்லி வைப்போம்
தொடாது வாதை சொல்லி வைப்போம்
_ தூய்மை
கொரோனா தொற்றைத் தடுத்திடவே
தொடர்ந்து தனிமையில் இருந்திடுவோம்
தொடரும் துன்பத்தைத் தடுத்திடுவோம்
தொய்வில்லா வாழ்வைத் தொடர்ந்திடுவோம்
தொய்வில்லா வாழ்வைத் தொடர்ந்திடுவோம்
_ தூய்மை
வந்தே மாதரம் பாடி நிற்போம்
வருமுன் எதையும் தடுத்து நிற்போம்
வல்லோர் வகுத்ததைக் கேட்டு நிற்போம்
வருவது எதையும் ஜெயித்து நிற்போம்
வருவது எதையும் ஜெயித்து நிற்போம்
_ தூய்மை
Comments
Post a Comment