முயற்சியும் பயிற்சியும்
முயற்சியும் பயிற்சியும்
முயற்சியும் பயிற்சியும்
வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும்
இரு வண்டிச் சக்கரம் போன்றது.
இரண்டும் சீராக இயங்க வேண்டும்.
அப்போதுதான் வண்டி நிர்ணயிக்கப்பட்ட
இடத்தைச் சென்றடைய முடியும்.
முயற்சி செய்துவிட்டு பயிற்சி
செய்யாமல் விட்டுவிட்டால் அதனால்
பயனில்லை.
பயிற்சி செய்துவிட்டு அதை நடைமுறைப்படுத்த
எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால்
தானாக எந்த முன்னேற்றமும் வீட்டுக்
கதவை வந்து தட்டாது.
நம்மில் பலர்செய்யும் பெரிய தப்புகளுள்
ஒன்று இதுதான்.
ஒன்றைக் கையில் எடுத்து மாங்குமாங்கென்று
உழைப்போம்.
இன்னொரு புறத்தை எட்டிப் பார்ப்பதே இல்லை.
அதனால் நமக்கு வர இருந்த வாய்ப்பு
வராமலே போய்விடும்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் இருந்தாள்.
இரவு பகலாக படித்து முதல் வகுப்பில்
தேர்ச்சி பெற்றிருந்தாள்.
ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிந்து வைத்துவிட்டு
வேலை வரும் வரும் என்று காத்திருந்ததுதான்
மிச்சம்.
வேலைக்காக வேறு எந்த முயற்சியும்
எடுக்கவில்லை.
பத்தாண்டுகளுக்கு மேலாக வேலை கிடைக்கவில்லை.
நன்றாக பயிற்சி செய்து வெற்றி கொண்டாள்.
அதற்கு மேற்பட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அதனால் அதற்குமேல் அவளால் நகர முடியவில்லை.
வேலைக்காக பிரத்தியேகமான எந்த முயற்சியும்
எடுக்காமல் இந்தக் காலத்தில் வேலை
கிடைத்துவிடுமா என்ன?
இது பலருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த,
நிகழ்ந்து கொண்டிருக்கக்
கூடிய எதார்த்தமான உண்மை .
சிலருக்கு எந்த வழியில் முயற்சி செய்ய வேண்டும்
என்ற வழிமுறைகள் தெரியாமல்கூட
இது நிகழலாம்.
எது எப்படியோ வெறும் பயிற்சியாலும் பயனில்லை.
பயிற்சி எதுவும் செய்யாமல் நானும் முயற்சி
செய்துதான் பார்க்கிறேன்.
ஒன்றும் கைகூடவில்லை என்று புலம்புவதிலும்
அர்த்தம் இல்லை.
எந்தவித பயிற்சியும் எடுக்காமல் நானும்
உசேன் போல்ட் போல் ஓடுவேன்.
என்னிடம் நல்ல முயற்சி இருக்கிறது .
என்றுஓட்டப்பந்தயத்தில் பங்கெடுத்தால்
தோற்றுத்தான் போவோம்.
பயிற்சியும் முயற்சியும் இணைந்து
நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
ஒன்றை விட்டு ஒன்று பிரிந்துவிடக்கூடாது.
வண்டி மாடு இணையாக சேர்ந்தே
இழுக்கும்போதுதான் வண்டி நகரும்.
ஒரு மாடு சோம்பேறியாகப் படுத்துக்கொண்டால்
ஒற்றை மாட்டால் வண்டியை எப்படி இழுக்க முடியும்.?
பயிற்சி இல்லாத முயற்சியில் பலனில்லை.
முயற்சி செய்யாமல் வெறும் பயிற்சியை வைத்துக்
கொண்டிந்தாலும் வாய்ப்புகள் வந்துவிடுவதில்லை.
பயிற்சியும் முயற்சியும் சந்திக்கிற
ஒரு புள்ளி வெற்றி.
இந்த இரண்டும் இருக்கிற ஒருவனால்
வெற்றி என்ற இலக்கை எளிதாக
எட்ட முடியும்.
பயிற்சி செய்வோம். அதை முன்னோக்கி
எடுத்துச் செல்ல முயற்சி மேற்கொள்வோம்.
வெற்றி நிச்சயம்.
Comments
Post a Comment