மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி....
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி...
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் "
குறள் :70
மகன் _ புதல்வன்
தந்தைக்கு _ அப்பாவுக்கு
ஆற்றும் _ செய்கின்ற
உதவி _ நன்மையான செயல்,கைமாறு
இவன்தந்தை _ இவனது தகப்பனார்
என்நோற்றான் _ என்ன நோன்பு செய்தான்
கொல் _ ஐயம்( இடைச்சொல் )
எனும் _ என்று கூறப்படும்
சொல் _ சொல்லும்படியான மொழி
மகன் தந்தைக்கு செய்யும் உதவி
யாதெனில் இவனுடைய பெற்றோர்
இப்படிப்பட்ட மகனைப் பெறுவதற்கு
என்ன தவம் செய்தனரோ என
பெருமைப்படும் விதமாக இருத்தல் வேண்டும்.
விளக்கம் :
மொத்தத்தில் பெற்றோரைப் பெருமைப்படுத்தும்
விதத்தில் பிள்ளைகள் இருத்தல் வேண்டும்.
இப்படி ஒரு பிள்ளை பிறப்பதற்கு கொடுத்து
வைத்திருக்க வேண்டும் என்றும் உலகம் மெச்சவேண்டும்.
என்ன புண்ணியம் பண்ணினனோ நீ வந்து
பிறந்திருக்கிறாய் என்று பெற்றோர் எண்ணி
எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டும்.
இதைத்தான் நாலுபேர் மத்தியில் என்னை
தலை நிமிர்ந்து நடக்க வைத்துள்ளாய் என்று
பெற்றோர் பெருமையுடன் கூறுவதாக இருக்குமோ !
மகனைச் சான்றோனாக்குவதற்கு அவன்
தந்தை பெரு முயற்சி எடுத்திருக்க வேண்டும்.
அதைத்தான் வள்ளுவர் என்னோற்றான் கொல்
என்கிறார்
தந்தைக்கு மகன் இந்தக் கடமையைத்
தவறாது ஆற்ற வேண்டும்.மகன்
தந்தையைச் சான்றோர் நிறைந்திருக்கும்
அவையில் முந்தி இருக்கச் செய்ய வேண்டும்.
தந்தை மகனுக்குச் செய்வது உதவி
என்றும் மகன் தந்தைக்கு ஆற்றுவது
நன்றி என்ற சொல்லால் வள்ளுவர்
குறிப்பிடுகின்றார்.
மகன் தந்தைக்குச் செய்யும் உதவி இவன்
தந்தை என்ன தவம் செய்தானோ என்று
சொல்லும்படி நடப்பதாகும்.
English couplet :
" To sire , what best requital can by grateful
child be done ?
To make men say , 'what merit gained the
father such a son?"
Explanation :
The duty of the children is to make
other people to explain what
prayers the parents had done to give
birth to these valuable
children.
Transliteration :
"makan dhandhaikku aatrum udhavi ivandhandhai
ennoatraan kol_enum sol "
Comments
Post a Comment