பொறாமை

                       பொறாமை 


 ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான்.
அவனுக்கு எப்போது பார்த்தாலும்
அடுத்தவர் வயலைப் பார்த்துப்
பொறாமைப்படுவதே  வழக்கம்.

பக்கத்து வயலில் கத்தரிச்செடி நட்டால் 
  இவரும் கத்தரிச் செடி நடுவார்.
 
அவர் வெண்டை வித்து ஊன்றினால் இவரும்
வெண்டை வித்து ஊன்றி வைப்பார்.

  அவர் செடிகளுக்குப் பூச்சி மருந்து அடித்தால்
  இவரும் மருந்தடிப்பார்.

இரண்டு வயல்களுமே நன்றாக வளர்ந்து வந்தன .

ஆனாலும் இந்த மனிதருக்குத் திருப்தியே
  இருக்காது.
 
  அவனைவிடவும் ஒரு பிடியாவது அதிகமாக
  மகசூல் பார்த்துவிட வேண்டும் என்ற ஒரு வெறி
  மனதில் வந்து உட்கார்ந்து கொண்டது.
 
"  இனி அவன் செய்வதுபோல் செய்யக் கூடாது.
  அவன்போடும் உரத்தைவிட சற்று
   அதிகமாகவே போட வேண்டும்.
  நீர்ப் பாய்ச்சும்போதும் அவனைவிட
  அதிக அளவு   நீர்ப் பாய்ச்ச வேண்டும் "
  என்று தீர்மானித்தான்.
 
  இப்போது தோட்டத்தில்  மிளகாய்ச்செடி
  வளர்ந்து காய்க்கும் பருவத்தில் நின்றது.
  நாள்தோறும் வந்து பார்த்துப் பார்த்து
  தண்ணீர் பாய்ச்சுவான்.
 
  பக்கத்து வயலைவிட
  இரண்டு அங்குலத்திற்காவது தண்ணீர்
  அதிகமாக நிற்கும்படி பார்த்துக் கொண்டான்.
 
  ஒரு வாரத்திற்குப் பிறகு செடியில்
  ஏதோ ஒரு ஒரு மாற்றம் தெரிய ஆரம்பித்தது.
 
"  என்ன செடியெல்லாம் ஒருமாதிரி
  பழுப்படிச்சதுபோல இருக்கு "என்று
  கலக்கமடைந்தான்.
 
  ஆனால் எதிராளி வயலில் எந்த
  ஒரு மாற்றமும்
  தெரியவில்லை.
 
  நான் அவனைவிட அதிகம் நீர் ஊற்றினேன்.
  என்   செடிக்கு மட்டும் பழுப்பு நோய்
  வந்திருக்கிறதே என்று எண்ணிக்
   கவலைப்பட்டான்.
 
  மறுநாள் மருந்து அடிச்சிப் பார்த்தான்.
  ஒன்றும் பிரயோஜனமில்லை.
 
  இரண்டு மூன்று நாட்களில் மொத்த இலையும்
  பழுத்து கீழே விழுந்து ,செடி முழுவதும்
  மொட்டையாக  நின்றது .
    அவனுக்கோ ஆற்றொண்ணாத் துயரம் !
    பக்கத்து வயல்காரனிடம் போய்  விசாரித்தான்.
  

"  உன்னைப் போல்தான் எல்லாம் செய்தேன்.

  சொல்லப் போனால் உன்னை விடவும்

  அதிகமாகவே உரம் போட்டேன் .
  உன்னைவிடவும் அதிகமாகவே நீர்ப் பாய்ச்சினேன்.
  பிறகு எப்படி என் பயிர் மட்டும் இப்படி
  பழுப்படித்துக் கொண்டு  நிற்கிறது "

  என்று கேட்டான்.
 
"  என்னை மாதிரி உரம்  போட்டாய் ...சரி.
  என்னைவிடவும் அதிகமாக நீர்ப்பாய்ச்சினாய்
  ஏன் ? "என்று கேட்டான் பக்கத்து வயல்காரன்.
 
  "அதிக மகசூல் கிடைக்கும் என்பதற்காகத்தான்"
  என்றான்.
 
"  மிளகு செடிக்கு குறைவாகத்தானே நீர்ப்
  பாய்ச்ச வேண்டும்.மிளகுச் செடி மூட்டில்

தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது.

  அப்படி நீர் தேங்கி நின்றால் வேர் அழுகிப் போய்
  செடி பட்டுவிடும்.
  அதைத்தான் நீ செய்திருக்கிறாய்.
  அதனால்தான் உன் மிளகுச்செடி பட்டுப்
  போய்விட்டது "என்று கூறினான்.

"  ஆ...என் செடி பட்டே போய் விட்டதா...!"
பொறாமையினால் எவ்வளவு பெரிய தப்பைப்
  பண்ணிவிட்டோம் என்று தலை குனிந்து நின்றான்.
 
  "இனியாவது அடுத்தவன் வயலைப் பார்த்துப்
  பருவம் பண்ணாதே. உன் வயலுக்கு
   என்ன வேணுமோ ...எந்தச்செடிக்கு எவ்வளவு
  நீர்ப்பாய்ச்சணுமோ எல்லாம் தெரிந்து வைத்து
  அதற்கு ஏற்ப  நீர் பாய்ச்சணும்.

  மிளகுச் செடிக்கு நெல்லுக்கு நீர்
  நிற்க வைப்பதுபோல  நீரைப் பெருக்கி வைத்தால்
  செடியின் வேர் அழுகி இப்படித்தான்
  பட்டுப் போகும் "என்றான் பக்கத்து வயல்காரன்.
 
அடுத்தவனைப் பார்த்து சூடு போட்டுக்
கொள்ளக்கூடாது  என்பது இதுதானோ!
பொறாமை எலும்புறுக்கிங்க....
அது நம்மையே கொஞ்சம் கொஞ்சமாக
அழித்துவிடும்.
அவரவர் கையின் பிரயாசம் அவரவர்க்கு
வழங்கப்படும்.

பொறாமைப்படுவதால் எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை.

பொறாமை ஒருபோதும் கூடாது ..

பொறாமைப்பட்டு உள்ளதையும் இழந்து

போனார் விவசாயி.

அவன் நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறானா....
பரவாயில்லை. அவன் உழைப்புக்கான
பலனை அவன் பெற்றிருக்கிறான்.
நாமும் முயற்சி செய்து படித்தால் நல்ல
மதிப்பெண் பெறலாம் .

அதற்காக அடுத்தவனைப் பார்த்து
பொறாமைப்படுவதில் என்ன
பலன் இருக்கப் போகிறது..
பொறாமையோடு கொள்ளுங்கள் பிணக்கு .
இன்றோடு தொடங்கட்டும் உங்கள்
 வெற்றிக் கணக்கு.

 
 
 
 
 
 
 
 
 
  

Comments

Popular Posts