யாரினும் காதலம் என்றேனா....

            யாரினும் காதலம் என்றேனா....

"யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று "
                          குறள்  : 1314

யாரினும் _ எல்லோரை விடவும்
காதலம்  _ ,காதல் கொண்டுள்ளேன்
என்றேனா _ என்று கூறினேன் 
ஊடினேன் _ ஊடல் கொண்டாள்
யாரினும் யாரினும் _ யார் யாரை விடவும்
என்று _ என்று சொல்லி

எல்லோரைவிடவும் மிகுதியாக உன்மேல் காதல்
கொண்டுள்ளேன் என்று நான் சொல்ல 
நீர் காதல் கொண்டோரில் 
யார் யாரை விடவும்  என்மீது 
அதிக காதல் கொண்டீர்
என்று கேட்டு அதற்கும் ஊடினாள் தலைவி.

தலைவன் சொல்லுவதாக குறள் அமைந்துள்ளது.

விளக்கம் :

"என்மீது வைத்துள்ள காதல் எவ்வளவு உயர்ந்தது
 சொல்லுங்கள்" என்று கேட்டாள் தலைவி.

 "மலையைவிட உயரமானது.." என்றான்.

" ம்உம். ..அவ்வளவு உயரமானதா....அப்படியானால்
எவ்வளவு ஆழமானது என்று சொல்லுங்கள்
பார்ப்போம் "

" கடலைவிடப்  ஆழமானது "
அப்பாடா ...ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதுபோல
நிம்மதி பெருமூச்சு விட்டான்.

" எவ்வளவு பெரியது என்று சொல்லுங்கள்..."
விடாமல் தொடர்ந்தாள் தலைவி.

"உலகை விடப் பெரியது....."

" அடேங்கப்பா... அப்புறம்..." என்றாள்

"அப்புறம்.... இந்த ஆகாயத்தைவிட பெரியது.
ஆகாயத்தைவிட...உயர்ந்தது.." ஏதோ பெரிதாக
பேசிவிட்டதுபோல தலைவியின் முகத்தைப்
பார்த்தான்.

"அப்புறம்... அப்புறம்..." 
 மறுபடி மறுபடி  என்று கேட்டுக் 
  கொண்டே இருந்தாள் தலைவி.

இனி என்ன சொல்ல முடியும் என்று
வார்த்தைகளைத் தேடிய தலைவன்
" எல்லோரையும் விடவும் அதிக காதல்
 உன்மீது வைத்திருக்கிறேன் "என்று
ஒட்டு மொத்தமாக  சொல்லி வைத்தான்.
 
" எல்லோரைவிடவும் என்றால்...
 யார்யாரைவிடவும்...வேறு யார் யாரெல்லாம்
 உனக்கு  இருக்கிறார்கள் "போட்டு உலுக்கி 
 எடுத்துவிட்டாள் தலைவி.

 இதுதாங்க காதல்...
 இந்த சின்ன சின்ன ஊடல்கள்
 இல்லாமல் காதல் இருக்க முடியாது.

திருக்குறளில் எவ்வளவோ கருத்துகளில்
படித்திருப்போம்.
அதிலெல்லாம் நம்மை வியக்க வைத்த 
வள்ளுவர் ....காதல் காட்சிகளைச் சொல்லும்போது
அடேங்கப்பா...என்று பிரமிக்க வைத்துவிடுவார்.

ஊடலுக்கு இதெல்லாமா காரணமாக இருக்கும்?

இருக்கும்....இருக்கும்....வள்ளுவர் சொன்னால்
சரியாகத்தான் இருக்கும்.

 English couplet :

"I love you more than all beside, 'T was thus I gently spoke,
What all, what all ? she instant cried ;and all her anger woke"

Explanation : 

When I said I loved her more than any other woman,
she said " more than others, yes, more than others"
and remains sulky.

Transliteration :

"Yaainum kaadhalam endrena  Oudinaal
Yaarinum Yaarinum endru "


 

Comments

  1. மனிதர்கள் கொண்ட ப ல வலிமையான உணர்வுகளில் ஒன்று காதல்.அதை திருக்குறள் வாயிலாக பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts