மகளிர் தின வாழ்த்து

மகளிர் தினம்


பெண்ணே பேரமுதே
 பேதை எனும் தமிழமுதே
        
மண்ணை ஆளலாம் வா
விண்ணில் விளையாடிட வா!
       
 பேசும் சித்திரமே
பெதும்பை எனும் பேரழகே!
           
 மானே மரகதமே
 மடந்தை எனும் மமதையே!
              
 மங்கா  குலவிளக்கே 
 மங்கை எனும் மல்லிகையே!
               
 அன்னமே அழகு ரதமே
 அரிவை எனும் ஆரணங்கே!
               
 தெண்ணீர் தடாகமே
 தெரிவை எனும் தேவதையே!
              
 பேராழியே எங்கள்  போராளியே
 பேரிளம் பெண் எனும் பெருமிதமே!
               
 பருவம் மாறும் பாத்திரமே
 திருவாய் கிடைத்த திரவியமே
         
  மண்ணை  ஆளலாம் வா!
 விண்ணில் விளையாடிட வா!
         
                                            
                    
  மகளிர் தினத்தில்
  மகிழ்ச்சி பூக்கள் தந்து
 வாழ்த்துகிறேன்.
                    

Comments

Popular Posts